கொரோனாவால் கிரிக்கெட் வீரர் பரிதாமாக உயிரிழப்பு...!


ராஜஸ்தான் அணியின் ஸ்பின்னரான விவேக் யாதவ் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனாவின் இரண்டாம் கட்ட அலை இந்தியாவில் பெரும் தாக்கத்தையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் ஆட்டோவிலும், ஆம்புலன்சிலும் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன.  திரையுலக பிரபலங்கள்,அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பல தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அண்மையில் ஐபிஎல்  விளையாட்டு வீரர்கள் பலருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.  இவர்களை தொடர்ந்து விருத்திமான் சாஹா, அமித் போன்றவர்களுக்கும் தொற்று  இருப்பது உறுதியாக,  ஐபிஎல்  தொடர் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



ராஜஸ்தான் அணிக்காக ரஞ்சிக்கோப்பை தொடரில் விளையாடியவர் தான் ஸ்பின்னர் விவேக் யாதவ் (36).
இவர் 18 முதல்தர போட்டிகளில்  57 விக்கெட்டுகளையும், 8 லிஸ்ட் ஏ போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அண்மையில் இவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை தொடர்ந்து,  இன்று காலை விவேக் யாதவ்  உயிரிழந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்தநிலையில்  விவேக்கின் குடும்பத்துக்கு ஆகாஷ் சோப்ரா இரங்கல் தெரிவித்துள்ளார். இது பற்றி டுவிட்டரில் குறிப்பிட்டிருப்பதாவது “ராஜஸ்தான் ரஞ்சி வீரரும், என்னுடைய நண்பருமான விவேக் யாதவ் காலமானார். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”  என கூறியுள்ளார்.

More News

முத்துவேல் கருணாநிதி எனும் நான்....! ஸ்டாலின் பதவியேற்பு விழாவிற்கு வந்த துரை தயாநிதி...!

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முக.ஸ்டாலின் இன்று முதல்வராக பதவியேற்றார்.

முதல்வர் ஸ்டாலின் போட்ட முத்தான மூன்று கையெழுத்துக்கள்!

தமிழக முதலமைச்சராக இன்று காலை முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றுக் கொண்டார் என்பதும் அவருடன் 33 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர் என்பதும் தெரிந்ததே.

ஆக்சிஜன் இல்லாமல் தவித்த சிஎஸ்கே வீரர்: பத்தே நிமிடத்தில் உதவி செய்த சோனுசூட்

தனது நெருங்கிய உறவினருக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் சிஎஸ்கே வீரர் ஒருவர் தவித்த நிலையில் அவருக்கு ஆக்சிஜன் கிடைக்க நடிகர் சோனு சூட் பத்தே நிமிடங்களில் செய்த உதவி வைரலாகி வருகிறது. 

இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்: முதல்வர் ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து!

தமிழக முதல்வராக இன்று பதவி ஏற்றுள்ள முக ஸ்டாலின் அவர்களுக்கு 'இனி உங்கள் குரல் தமிழகத்தின் குரலாய் ஒலிக்கும்' என நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜோதிடம் பிராடு என்பது நிரூபணமாகிவிட்டது: பிரபல இயக்குனர் டுவிட்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் ஜோதிடம் என்பது ஒரு பிராடு என்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாக தனது டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது