காதல் கிரிக்கெட்: திருமணம் முடிந்ததும் மனைவிக்கு பவுலிங் போட்ட தமிழக கிரிக்கெட் வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளரும், கொல்கத்தா அணியின் முக்கிய வீரருமான வருண் சக்கரவர்த்தி தனது நீண்ட நாள் தோழியை நேற்று திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் இரு வீட்டார்களின் வாழ்த்துக்களுடன் சென்னையில் சிறப்பாக நடந்தது

இந்த நிலையில் திருமணம் முடிந்ததும் மனைவிக்கு வருண் சக்கரவர்த்தி பவுலிங் போட, அவர் போட்ட பந்தை அவரது மனைவி பேட்டிங் செய்யும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த ’தனிஒருவன்’ படத்தில் இடம்பெற்ற ’காதல் கிரிக்கெட்’என்ற பாடலும் இந்த வீடியோவின் பின்னணியில் ஒலித்தது என்பது குறிப்பிடத்தக்கது

வருண் சக்கரவர்த்தி தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்ததை அடுத்து அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் முதலில் வருண் சக்கரவர்த்தி பெயர் இடம் பெற்று இருந்தது என்பதும், ஆனால் காயம் காரணமாக அவர் விலக நேரிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

எழுபது என்பது முதுமையின் இளமை: ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த கவிப்பேரரசு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்

புத்தாண்டு தினத்தின் தளபதி ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கிடைக்குமா?

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள 'தளபதி 65' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்து சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது

மக்களின் சூப்பர் ஸ்டாராக மாறுவாரா சூப்பர் ஸ்டார் ரஜினி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிரதமர் முதல் சாமானிய ரசிகன் வரை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மூடப்பட்ட அறையில் கொரோனா வைரஸ் எவ்வளவு நேரம் உயிர்வாழும்??? புதிய ஆய்வால் ஏற்பட்ட அதிர்ச்சி!!!

கடந்த 11 மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்வை தொடர்ந்து கட்டுப்படுத்த முடியாத நிலையில் உலக நாடுகள் தவித்து வருகின்றன

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் இன்று அதிகாலையே போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டின் அருகே கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்கள்