கிரைம் திரில்லர் 'அஜினோமோட்டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

  • IndiaGlitz, [Friday,October 07 2022]

நடிகர் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'அஜினோமோட்டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'அஜினோமோட்டோ'. இதில் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காயத்ரி ரேமா நடித்திருக்கிறார். இவர்களுடன் அனந்த் நாக், பிரான்சு திவாரி, ஆராத்யா, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கே. கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. எம். உதயகுமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை எம். எஸ். ஸ்ரீநாத் மேற்கொண்டிருக்கிறார். கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தத்தாத்ரே ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவராஜ் பன்னீர்செல்வம் மற்றும் ஆ. தமிழ் செல்வன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' 'அஜினோமோட்டோ' என்பது சுவையை அதிகரிக்கக்கூடியது. ஆனால் அது மனிதர்களை மெதுவாக கொல்லும் விஷம். இதனை மையப்படுத்தி ‘அஜினோமோட்டோ’ படத்தின் கதை தயாராகியிருக்கிறது. கதையில் நடைபெறும் சில சம்பவங்கள், கதாபாத்திரங்களுக்கு, அந்த சமயத்தில் நல்லதாகத் தோன்றும். ஆனால் பிறகு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதன் பின் விளைவுகளும் கடுமையாக இருக்கும். அது என்ன? என்பதை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லி இருப்பதே இப்படத்தின் திரைக்கதை. மேலும் இது போன்ற அனுபவங்களை, கழுகு கண் பார்வையுடனான திரைக்கதையாக விவரிக்கும் போது, பார்வையாளர்களுக்கு புது வகையான அனுபவம் கிடைக்கும். '' என்றார்.

அஜினோமோட்டோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெறும் நாயகனின் தோற்றமும், இணையத்தில் வெளியாகி இருக்கும் மோஷன் போஸ்டரும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. ‘அஜினோமோட்டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கும், மோஷன் போஸ்டருக்கும் இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது.
 

More News

மறைந்த நடிகர் லோகேஷின் மனைவி இப்படி செய்யலாமா? குடும்பத்தினர் வருத்தம்!

''மர்ம தேசம்' என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்த லோகேஷ் சமீபத்தில் காலமான நிலையில் அவருடைய மனைவி செய்த செயல் காரணமாக அவரது குடும்பத்தினர் பெரும் வருத்தத்தில் உள்ளனர். 

வேற லெவலில் கிளாமரில் கலக்கும் பிரியா வாரியர்.. ஹாட்

 'ஒரு ஆதார் லவ்' என்ற திரைப்படத்தில் நடித்த பிரியா வாரியார் அந்த பĩ

சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர்  “எமகாதகி” ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

நடிகர் வெங்கட் ராகுல் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் தயாரிப்பில்  இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் 'எமகாதகி' படத்தின் படப்பிடிப்பு

என் கணவர் என்னை அடித்து உதைக்கிறார்: 3 மாத கர்ப்பிணி நடிகையின் கதறல் வீடியோ!

என் கணவர் என்னை அடித்து உதைக்கிறார் என மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ரஜினியின் அடுத்த இரண்டு படங்களை தயாரிக்கும் நிறுவனம் இதுவா? டபுள் ஜாக்பாட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.