பாவனா கடத்தலுக்கு பிரபல நடிகர் காரணமா?

  • IndiaGlitz, [Tuesday,February 21 2017]

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தின் விசாரணை தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஏற்கனவே இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் என்று கூறப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த கடத்தலில் பிரபல நடிகர் உள்பட பல முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும், லட்சக்கணக்கான பணம் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபல நடிகர் திலீப் தனது மனைவி மஞ்சுவாரியரை பிரிய பாவனாதான் காரணம் என்றும், அதற்கு பழிவாங்கவே திலீப் பின்னணியில் இந்த கடத்தல் நடந்ததாகவும் கூறப்பட்டு வந்தது.

ஆனால் இந்த தகவலை நடிகர் திலீப் மறுத்துள்ளார். பாவனா கடத்தலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இந்த சம்பவம் தன்னை மிகவும் பாதித்துள்ளதாகவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் திடுக்கிடும் திருப்பங்கள் இந்த வழக்கில் ஏற்பட்டு வருவதால் விரைவில் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் பிடிபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால். சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

நடிகர் சங்க செயலாளராக இருக்கும் நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட கடந்த சில நாட்களுக்கு முன்னர் விண்ணப்பம் செய்தார். இந்த விண்ணப்பத்தை உலக நாயகன் கமல்ஹாசன் முன்மொழிந்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

தேசிய அளவிலான பளூதூக்கும் போட்டியில் தமிழ் நடிகை

விளையாட்டு துறையில் சாதனை படைத்த சடகோபன் ரமேஷ், ரித்திகாசிங் போன்ற பலர் சினிமா துறையில் நுழைந்தது போல், சினிமாத்துறையில் உள்ள ஒரு நடிகை விளையாட்டு துறைக்கு சென்றுள்ளார்...

மீண்டும் இணைந்த சிம்பு-அனிருத்

பல்திறமை கொண்ட நடிகர்களில் ஒருவராகிய சிம்பு, சமீபத்தில் சந்தானம் நடிக்கும் 'சக்க போடு போடு ராஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

நடிகர் சங்கத்தின் கோரிக்கைக்கு கேரள அரசின் முதல்வர் அலுவலகம் பதில்

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் சில மர்ம நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் கேரள திரையுலகை மட்டுமின்றி கோலிவுட் திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

ரஜினி-ரஞ்சித் படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் சாதனை வசூல் புரிந்த நிலையில் இந்த சூப்பர் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது என்பது ஏற்கனவே அறிந்ததே. தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது...