close
Choose your channels

உலகிலேயே ரொம்ப காஸ்ட்லி காரை சொந்தமாக்கி இருக்கும் ரெனால்டோ!!!

Monday, August 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகிலேயே ரொம்ப காஸ்ட்லி காரை சொந்தமாக்கி இருக்கும் ரெனால்டோ!!!

 

கால்பந்து உலகின் ஜாம்பவனான கிறிஸ்டியானோ ரோனால்டோ கார்களின் மீது அதிக விருப்பம் கொண்டவர். அவருடைய கார் ஷெட்டில் நிற்கும் ஒட்டுமொத்த கார்களின் விலை 30 மில்லியன் யூரோக்கள் எனக் கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் 264 கோடி ரூபாய். விலையைக் கேட்டாலே தலைச்சுற்றும் அளவிற்கு உலகின் ஒட்டுமொத்த கலெக்ஷன்களையும் வைத்திருக்கும் ரொனால்டோவிற்கு தற்போது Bugatti La Voiture Noire கார் கிடைக்கப் போகிறது. உலகிலேயே இந்த காரின் உற்பத்தி வெறும் 10 மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. விலை ஒன்றும் அவ்வளவு அதிகமல்ல 8.5 மில்லியன் யூரோக்கள். இந்திய மதிப்பில் வெறும் 75 கோடி ரூபாய்தான்.

36 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் நடந்த இத்தாலி நிறுவனமான ஜீவெவ்டஸூக்கு என்ற பிரபல இத்தாலிய கிளப் அணிக்காக விளையாடி அந்த அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். இந்த அணி இத்தாலி சீரி ஏ கால்பந்து தொடரில் 36 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதில் பிரமாதமாக விளையாடிய கிறிஸ்டினோ ரொனால்டோவிற்கு உலகின் விலை அதிகமானதும் அரிதானதுமான Bugatti la Voiture Noire காரை முன்பதிவு செய்துள்ளது அந்த சாம்பியன் அணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரின் நெம்பர் பிளேட்டிற்கு தன்னுடைய இன்ஷியலான CR எனப் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கார் மணிக்கு 380 கி.மீ வேகத்தில் பயணிக்கக் கூடியது. 1600 குதிரைத்திறன் கொண்ட இக்கார் வெறுமனே 2.4 நொடிகளில் 60 கி.மீ வேகத்தை எட்டிப்பிடித்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் இவருக்கு இந்த கார் கிடைத்துவிடும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதைத்தவிர Bugatti Veyron Grand Sport vitesse, Ferrari, F430, Phantom Rolls-Royce, Lamborghini Aventador, Maserati, GranCabrio the Bentley ,Continental GTC, MClaren senna போன்ற வகை கார்களும் ரொனோல்டோவிடம் இருக்கிறது. இந்தக் கார்களை நிறுத்துவதற்காகவே 88 அடி நீளம் கொண்ட சொகுசு படகு ஒன்றையும் 41 கோடி ரூபாய் செலவில் இவர் உருவாக்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.