close
Choose your channels

கச்சா எண்ணெய் வீழ்ச்சி!!! அரபுநாடுகள் – ரஷ்யா முட்டிக்கொண்ட கதை!!!

Monday, March 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கச்சா எண்ணெய் வீழ்ச்சி!!! ரஷ்யா – அரபுநாடுகள் முட்டிக்கொண்ட கதை!!!


மார்ச் 6 ஆம் தேதி வியன்னாவில் நடைபெற்ற ஒபேக் கூட்டமைப்பு நாடுகள் மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்கிடையிலான கருத்தரங்கு நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் நடைபெற்ற விவாதங்கள் மற்றும் மாற்றங்கள் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சியைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. இதுநாள் வரை அமெரிக்கா- சீனா வல்லரசு – வர்த்தகப் போரைக் கவனித்து வந்த உலக நாடுகள் இந்தக் கருத்தரங்கிற்குப் பின்னர், ரஷ்யா மற்றும் அரேபியா நாடுகளுக்கு இடையிலான கச்சா எண்ணெய் விலைக்குறைப்பு யுத்தத்தை உற்றுநோக்க ஆரம்பித்து இருக்கிறது.

ஒபேக் நாடுகளின் கூட்டமைப்பு: கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முறைப்படுத்தும் நோக்கில் ஈரான், ஈராக், குவைத், சவூதி, வெனிசூலா ஆகிய 5 நாடுகள் இணைந்து முதன் முதலாக 1960 இல் ஒபேக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தின. தற்போது இந்த ஒபேக் கூட்டமைப்பில் 14 நாடுகள் உறுப்புநாடுகளாக இருக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. மொத்த உலக எண்ணெய் கையிருப்பில் ஒபேக் 81.9% தன்னுடையதாக வைத்திருக்கிறது. மொத்த உலக உற்பத்தியில் 44% இந்த நாடுகள் உற்பத்தி செய்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.

தற்போது உலக நாடுகள் முழுக்க கொரோனா பாதிப்பை சந்தித்து வருகின்றன. கொரோனா பாதிப்பினால் எண்ணெய்க்கான தேவை குறைந்து இருக்கிறது. வாகன இயக்கத்திற்குப் பல நாடுகள் தடைவிதித்துள்ள நிலையில் எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது பற்றி அரபு நாடுகள் முடிவெடுத்தன. ஒபேக் கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாத நாடுகள் கூட்டத்தில் அரபுநாடுகள் இந்தக் கருத்தைத் தெரிவித்தபோது அதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பை தெரிவித்தது. மேலும், அரேபிய நாடுகளோடு போட்ட ஒப்பத்தந்திலிருந்து தன்னை விலக்கி கொண்டது. இந்தச் சண்டைதான் தற்போது உலக நாடுகளில் கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சிக்குக் காரணமாக மாறியிருக்கிறது.

இதற்கு மாற்றாக அரேபியே நாடுகள் இன்னொரு முடிவை எட்டியிருக்கின்றன. முன்பிருந்த உற்பத்தி எண்ணெயின் அளவை விட தற்போது அதிகபடியான எண்ணெய் உற்பத்தியை மேற்கொள்ள இருக்கிறது. இதுவரை 9.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்துவந்த அரபு நாடுகள் வருகிற ஏப்ரல் 1 முதல் 12.3 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யவும் முடிவு செய்திருக்கிறது.

அதோடு கடந்த பிப்ரவரியில் இருந்ததை பிட தற்போது 30% அளவுக்கு விலையைக் குறைத்து வெறுமனே 30 டாலக்கும் குறைவாக தற்போது ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த விலைகுறைப்பு முன்பிருந்ததைவிட பாதிக்கு பாதி குறைவு என்பதும் குறிப்பிடத் தக்கது.

மேலும், தன்னிடம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு விலையில் 20% சலுகை தருவதாகவும் அரபு நாடுகள் தெரிவித்து இருக்கின்றன. கடந்த மாதத்தில் ஒரு பீப்பாயின் விலை 70 டாலராக இருந்த நிலையில் தற்போது 50% ஆக குறைந்து 34 டாலராக விற்பனை ஆகிவருகிறது. உற்பத்தி அதிகப்படுத்தும்போது இன்னும் விலையில் மாற்றத்தை எதிர்ப்பார்க்கலாம் எனவும் பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கடும் சரிவைச் சந்தித்துள்ளபோது இந்திய மக்கள் அதன்பலனை அனுபவித்து விடலாம் என மார்ச் மாதத்தின் துவக்கத்தில் கனவு கண்டுவந்தனர். ஆனால் அந்தக்கனவு பலிக்காமல் போனதுதான் துருதிஷ்டமே. ஒருவேளை கச்சா எண்ணெய் சரிவினால் விலையைக் குறைப்பதாக மத்திய அரசு முடிவெடுத்து இருந்தாலும் அந்த விலைக்குறைப்பு குறைவாகத்தான் இருந்திருக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.


காரணம், பெட்ரோல், டீசல் விலைப்பொருட்களுக்கு நாம் செலுத்தும் வரியின் அளவைப் பொறுத்து விலைக்குறைப்பு சாத்தியமில்லை எனக் கருத்துக் கூறுகின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களுக்கு இந்தியர்கள் தற்போது மத்திய அரசுக்கு வரியாக 17 ரூபாயையும், மாநில அரசுக்கு 15 ரூபாயையும், விநியோகத்திற்கென்று 8 ரூபாயையும், சுத்திகரிப்புக்கு 1 அல்லது 2 ரூபாய் என்று மொத்தமாக ஒரு லிட்டருக்கு 47 ரூபாயைக் கட்டவேண்டி இருக்கிறது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலைக்குறைப்பு என்றால் அது 5 முதல் 10 ரூபாயக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்த நிலையில் அதுவும் நடக்காமல் போனது.

கடந்த 2016 இல் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 3,225 ரூபாயாக இருந்தபோது, பெட்ரோல் விலை 59.13 ரூபாயக இருந்தது. அடுத்த வருடம் பேரல் 3,993 ரூபாயாக அதிகரித்தபோது 72.28 காசாக விலையை அதிகரித்தார்கள். அன்றைக்கு ஏற்பட்ட விலையேற்றம் இன்னும் குறையவே இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. மார்ச் மாதம் முதற்கொண்டு 3,431 ரூபாயாக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் 2,549 ஆக குறைந்து இருக்கிறது. ஆனாலும் விலை 74.28 இல் இருந்து 73.02 ரூபாயாக மட்டுமே குறைத்து இருக்கிறார். மேலும், கலால் வரியையும் அதிகப்படுத்தி இருக்கிறார்கள் சர்வதேச அளவில் விலைக்குறைப்பு ஏற்பட்டுள்ள நேரத்தில்

இந்தியா பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து இருக்கும் வேளையில், சர்வதேச விலைக்குறைப்பை அடுத்து பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்து இருந்தால் அது நல்ல பலனை கொடுத்து இருக்கும் எனப் பலரும் நினைத்தனர். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, போக்குவரத்து வாகனக் கட்டணங்களில் கட்டணக் குறைப்பை ஏற்படுத்தி இருக்கும். இது தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு உதவியாக இருந்திருக்கும். அதேபோல பெட்ரோல் டீசல் விலைக்குறைப்பு ஏற்பட்டு இருந்தால் மக்களிடம் பணத்தேவை குறைந்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ஒரு வழியாக அமைந்திருக்கும் எனவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.