பஞ்சாப் அணி வீரரின் காலைத் தொட்டு வணங்கிய சிஎஸ்கே வீரர்… வைரல் புகைப்படம்!

பெரியவர்களின் காலை தொட்டு வணங்கும் பழக்கம் இந்தியச் சமூகத்தில் பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது. இந்தப் பழக்கத்தைக் குறித்து அவ்வபோது சில விமர்சனம் வைக்கப்பட்டாலும் தொடர்ந்து மூத்தவர்களைக் கவுரவிக்கும் பொருட்டு இந்தப் பழக்கம் பெரும்பாலான துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் சங்கீதம், பரதநாட்டியம் போன்ற துறைகளில் இன்றும் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கிரிக்கெட்டிலும் இந்தப் பழக்கத்தை சில இளம் வீரர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அதிலும் நேற்றைய ஐபிஎல் போட்டியை ஒட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரும் இளம் வீரருமான தீபக் சாஹர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் காலைத் தொட்டு வணங்கிய காட்சி பலரையும் மெய்ச்சிலிர்க்க வைத்து இருக்கிறது.

மேலும் இப்படி காலைத் தொட்டு வணங்கிய தீபக் சாஹர் தொடர்ந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது மேலும் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில், தீபக் ஹோடா, நிக்கோலஸ் பூரான் போன்றோரின் விக்கெட்டுகளை நேற்று தீபக் சாஹர் மிக எளிதாக வீழ்த்தினார். இதனால் நேற்றைய ஆட்டநாயகனாகவும் தீபக் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் முகமது ஷமியின் காலைத் தொட்டு வணங்கிய தீபக் சாஹரின் புகைப்படம் தற்போது இணையத்தில் கவனம் பெற்று இருக்கிறது.

More News

விவேக் எங்கயும் போகல, அவன் உங்களோட தான் இருக்கான்: வடிவேலு கண்ணீர் அஞ்சலி

காமெடி நடிகர் விவேக் இன்று காலமான நிலையில் அவருக்கு திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்து வருகிறோம்

வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிஎஸ்கே வீரர்… கிரவுண்டே அதிர்ந்துபோன சம்பவம்!

நேற்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பார்த்து ஒட்டுமொத்த சிஎஸ்கே வீரர்களும் வியந்து போயினர்.

அறிவுப்பூர்வமான வசனங்கள் மூலம் சிரிக்கவும் வைத்தவர் விவேக்: பிரதமர் மோடி

பிரபல நகைச்சுவை நடிகர் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் இன்று அதிகாலை காலமான நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

சினிமாவிற்கு வருவதற்கு முன் 1983ல் எடுத்த விவேக்கின் புகைப்படம் வைரல்!

காமெடி நடிகர் விவேக் நேற்று மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி

சின்னகலைவாணர் மறைவு: த்ரிஷா, ப்ரியா பவானிசங்கர் உள்பட நேரில் அஞ்சலி செய்த பிரபலங்கள்

சின்ன கலைவாணர் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வரும் நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமான நிலையில் அவருடைய உடல் அவருடைய விருகம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும்