close
Choose your channels

சாக்சி தோனியின் அன்பு முத்தத்தை பெற்ற சிஎஸ்கேவின் இளம் வீரர்!

Monday, October 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடிய சிஎஸ்கே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பதும் இந்த போட்டியில் விளையாடிய இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் அபாரமாக அரைசதம் அடித்து கடைசி வரை நின்று அணியின் வெற்றிக்கு உதவினார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இதே போட்டியில் இன்னொரு இளம் வீரர்கள் களம் இறக்கப்பட்டார். அவர்தான் மோனுகுமார். கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியில் இவர் இருந்தாலும் இதுவரை விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் மோனுகுமாருக்கு இடம் கிடைக்கவில்லை

நேற்று முதல்முதலாக இடம் கிடைத்ததை அடுத்து அவர் இரண்டு ஓவர்கள் பந்துவீசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களம் இறங்கிய இந்த மோனுகுமார் யார் என்பதை நெட்டிசன்கள் இணையதளங்களில் தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது தோனியின் மனைவி சாக்சி தோனி அவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்

மோனுகுமாரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் தோனியுடன் மிக நெருக்கமாக இருந்துள்ளது மட்டுமின்றி தோனியின் குடும்ப நண்பராகவும் இருந்துள்ளார். தோனியின் சொந்த ஊரான ராஞ்சிதான் மோனுகுமாருக்கும் சொந்த ஊர் என்பதால் தோனியின் குடும்பத்தில் ஒருவராக இருந்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் தான் குடும்ப நண்பர் என்ற ரீதியில் மோனுகுமாருக்கு சாக்சி முத்தமிட்ட இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.