ஜெயலலிதாவின் 'போயஸ் கார்டன்' தற்போதைய நிலை.

  • IndiaGlitz, [Wednesday,February 15 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது 'போயஸ் கார்டன்' என்றாலே ஒரு தனி மதிப்பும் மரியாதையும் இருக்கும். போயஸ் கார்டனுக்குள் குறிப்பாக ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா இல்லம்' பகுதியில் யாரும் சாதாரணமாக நுழைந்துவிட முடியாது. ஏகப்பட்ட கெடுபிடிகள், போலீஸ் பாதுகாப்பு என பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.
1967ஆம் ஆண்டு ஜெயலலிதா மற்றும் அவரது தாயார் சந்தியா ஆகியோரால் கட்டப்பட்டா இந்த இல்லம் சுமார் 24,000 சதுரடி பரப்பளவை கொண்டது. இந்த வீட்டின் மதிப்பு ரூ.44 கோடி என கடந்த சட்டசபை தேர்தலின் போது ஜெயலலிதா தனது வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா, இளவரசி ஆகியோர் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். ஆனால் இருவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ளதால் போயஸ் கார்டன் இல்லம் தற்போது யார் வசமாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் 'அம்மா நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் சில நாட்களுக்கு முன் அறிவித்து அதற்காக ஒரு கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கினார்.
இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் போயஸ் கார்டன் இல்லம் தற்போது வெறிச்சோடி உள்ளது. இந்த இல்லத்திற்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதோடு, தற்போது எந்தவித கெடுபிடிகளும் இல்லை. ஒரு தலைவர் வாழ்ந்த வீடு என்பதற்கு எந்தவித அடையாளமும் இல்லாமல் இருக்கும் இந்த இல்லம் ஓபிஎஸ் அவர்களின் முயற்சியால் நினைவு இல்லமாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.,

More News

முத்த போட்டிக்கு ரெடியா? காதலர்களுக்கான 'காதலர் தின' பரிசு

சயித் அலிகான், கங்கனா ரனாவத், சாஹித் கபூர் நடித்த 'ரங்கூன்' என்ற பாலிவுட் திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இது முடிவல்ல..ஆரம்பம். நடிகர் பிரகாஷ்ராஜ்

சசிகலாவின் சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளிவந்துவிட்டதால் கூடிய விரைவில் தமிழக அரசியல் குழப்பத்திற்கு முடிவு கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ஹரிக்கு சூர்யாவின் ஆச்சரிய பரிசு

இந்த படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் ஹரிக்கு ஆச்சரியமான பரிசு ஒன்றை அளித்துள்ளார்....

சசிகலா சரண் அடைய கால அவகாசமா? சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, நீதிமன்றத்தில் உடனே சரண் அடைய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

வெடி வெடிப்பதா? ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. சாபம் விடும் சி.ஆர்.சரஸ்வதி

சுப்ரீம் கோர்ட் இன்று அளித்த சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா ,சசிகலா உள்பட 4 பேர்களுக்கும் தண்டனை வழங்கியுள்ளது