இயக்குனர் சி.வி.குமாரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,February 14 2020]

பா ரஞ்சித் இயக்கிய முதல் படமான ’அட்டகத்தி’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய முதல் படமான ’பீட்சா’ மற்றும் சூது கவ்வும், முண்டாசுப்பட்டி, உள்பட பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர் ’மாயவன்’ மற்றும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவி குமார் தயாரிப்பில் ஏற்கனவே ஜிவி பிரகாஷ் நடித்த '4ஜி’ மற்றும் கலையரசன் நடித்து வரும் ’டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும்’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் சி.வி.குமார் தயாரிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சிவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு ’பிஈ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அம்மு அபிராமி முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கும் இந்த படத்தை குறும்படங்களை இயக்கி புகழ் பெற்ற விக்கி பாஸ்கர் என்பவர் இயக்கவுள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

More News

பிறக்க போகும் பிள்ளைகள் தலையிலும் கடன் சுமை: கமல்ஹாசன்

தமிழக பட்ஜெட் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களால் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம்போல் இந்த பட்ஜெட்டையும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தும்,

'இந்தியன் 2', 'தலைவன் இருக்கின்றான்' அப்டேட் கொடுத்த கமல்!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைக்காவின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வருகிறது 'இந்தியன் 2' திரைப்படம்.

பஜாஜின் புதிய BS6 பைக்குகள்.. விலை என்ன தெரியுமா..?

ஏப்ரல் 1, 2020 முதலாக, நாடெங்கும் BS-6 மாசு விதிகள் அமலுக்கு வருவது தெரிந்ததே. இதனால் வாகனத் தயாரிப்பாளர்கள், தமது தயாரிப்புகளை அதற்கேற்ப மேம்படுத்தும் பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

மொட்டைத்தலை, மூன்று கண்ணாடி: பிரபுதேவா அடுத்த படத்தின் அசத்தும் ஃபர்ஸ்ட்லுக்

பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இரவு 7 மணிக்கு நடிகர் தனுஷ்

அதானியின் நிலக்கரி சுரங்கத்திற்கு காட்டையே அழித்த ஒடிசா அரசு..! போராடும் பழங்குடிகள்.

இந்நிலையில் 4,000 ஏக்கரில் 54% நிலம் வனப்பகுதியாக உள்ளது. இந்த வனத்தில் உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை அழித்து நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதாக கூறப்படுகிறது.