close
Choose your channels

சி.வி.குமாரின் 'மாயவன்' சென்சார் தகவல்கள்

Tuesday, June 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'அட்டக்கத்தி', 'பீட்சா', 'சூது கவ்வும்', உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குனராகி இயக்கிய முதல் படம் 'மாயவன்'. த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நிறைவு பெற்று ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்து சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த படத்திற்கு 'யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. சென்சார் சான்றிதழ் பெற்றதை அடுத்து இந்த படம் ஜூலையில் வெளியாகும் என தெரிகிறது. இந்த தகவலை சி.வி.குமார் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

சந்தீப்கிஷான், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், பகவதி பெருமாள், அக்சரா கெளடா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் லியோ ஜான்பால் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.