கேன்சரால் அவதிப்பட்ட பிரபல இயக்குநர் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Monday,November 15 2021]

நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான “செங்கோட்டை“ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குநர் சி.வி.சசிகுமார்(54). இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாரடைப்பால் காலமானார். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் அர்ஜுன், மீனா, ரம்பா ஆகியோர் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான “செங்கோட்டை“ திரைப்படத்தை இயக்கியவர் சி.வி.சசிகுமார். இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் பார்த்திபன் நடிப்பில் “உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்“ எனும் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.

இதற்குப் பின்பு வேறெந்த திரைப்படங்களையும் இயக்காத சி.வி.சசிகுமார் பலருக்கு கதை, திரைக்கதை உருவாகத்தில் உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொண்டை புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த சி.வி.சசிக்குமார் நேற்று சென்னை, போரூர் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்.

இந்தத் தகவல் தமிழ் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சி.வி.சசிகுமாரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

More News

அல்லு அர்ஜூனின் 'புஷ்பா' படத்தில் சமந்தா: ஒரு ஆச்சரிய தகவல்

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புஷ்பா' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

'சொல்லி அடிச்சிருக்கார்: சிறுத்தை சிவா குறித்து ரஜினிகாந்த்!

'விஸ்வாசம்' போல ஒரு படம் வேண்டும் என இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் கேட்டேன் என்றும் அவரும் சொல்லி அடிச்சிருக்கார்' என்றும் ரஜினிகாந்த் தனது மகளின் செயலியில் குரல் வடிவில் ஆடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

'ஜெய்பீம்' விவகாரம்: சூர்யாவுக்கு ஆதரவளித்த பா ரஞ்சித்!

'ஜெய்பீம்' படம் விவகாரம் தொடர்பாக சூர்யாவுக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதரவளித்து #westandwithsurya  என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து வரும் நிலையில் இதே ஹேஷ்டேக்கை பதிவு

'காத்துவாக்குல ரெண்டு காதல்' சமந்தாவின் கேரக்டர் அறிவிப்பு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது

'ஜெய்பீம்' படத்தின் நோக்கம் இதுதான்: திருமாவளவனுக்கு சூர்யா பதில்!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படத்தை பல அரசியல் பிரபலங்கள் பாராட்டி வரும் நிலையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில்