புதிய வைரஸ்: பயனாளிகள் ஜாக்கிரதை

  • IndiaGlitz, [Wednesday,May 20 2020]

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் தற்போது புதிய வைரஸ் ஒன்று தோன்றி வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பயனாளிகளை மோசடி செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

செர்பரஸ் ட்ரோஜன் என்ற பெயரில் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடும் புதிய வைரஸ் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சிபிஐ தெரிவித்துள்ளது. சர்வதேச போலீஸாரின் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிபிஐ அனைத்து மாநில அரசுகளுக்கும், வங்கிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது அதில் கொரோனா குறித்த விவரங்கள் அடங்கிய குறுந்தகவல் மற்றும் இமெயில் அனுப்பபடுவதாகவும் அந்த இமெயில் அல்லது குறுந்தகவலில் உள்ள லிங்க்கை க்ளிக் செய்தால் செர்ப்ரஸ் வைரஸ் கணினி மற்றும் மொபைல் போனுக்குள் புகுந்துவிடும் என்றும் அந்த வைரஸ் மின்னஞ்சல், வங்கி கணக்கு விபரம், கிரிடிட் கார்டு டெபிட் கார்டு உள்பட அனைத்து ரகசியங்களும் திருடி விடும் என்றும் இதனால் பயனாளிகளின் பணம் ஒட்டுமொத்தமாக பணமும் பறிபோக வாய்ப்பு இருப்பதாகவும் சிபிஐ எச்சரித்துள்ளது.

இதனை அடுத்து கொரோனா வைரஸ் குறித்து வரும் நம்பகத்தன்மை இல்லாத செயலிகளை பொதுமக்கள் டவுன்லோடு செய்யக்கூடாது என்றும் அதுகுறித்து வரும் குறுந்தகவல் ம்ற்றும் லிங்குகளை பொதுமக்கள் கிளிக் செய்யக்கூடாது என்றும் சிபிஐ கூறியுள்ளது. இதுகுறித்து வங்கி நிர்வாகிகளும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா நிலவரம்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தில் இருந்து மூவாயிரமாக மட்டுமே இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 5000க்கும்

12 ஆயிரத்தை தாண்டிய தமிழக கொரோனா பாதிப்பு: இன்று மட்டும் எவ்வளவு?

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தமிழக சுகாதாரத்துறை தினந்தோறும் மாலையில் அறிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை

மகனுக்கு முடிதிருத்தம் செய்த சச்சின் தெண்டுல்கர்: வைரலாகும் வீடியோ

இந்த கொரோனா விடுமுறை பலருக்கு பல்வேறு பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது என்பதும் இதுவரை செய்யாத வேலைகளைக்கூட பலரை செய்ய வைத்துள்ளது என்பது தற்போது வெளிவந்து கொண்டிருக்கும்

2013ஆம் ஆண்டிலேயே இந்திய மொழியை சரளமாக பேசிய 'மணி ஹெய்ஸ்ட்' நடிகை

ஓடிடி பிளாட்பாரத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் மணி ஹெய்ஸ்ட்' சீரியல் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது.

அடிமடியில் கை வைக்க வேண்டாம்: அரசுக்கு வைரமுத்து எச்சரிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு கடந்த இரண்டு மாதங்களாக பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.