அரபிக்கடலில் டவ்-தே புயல்… எப்போது கரையைக் கடக்கும்? பாதிப்பு யாருக்கு?

தென்கிழக்கு அரபிக் கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா, கர்நாடகா, கோவா, தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு தலா 50 க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. அது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அப்பகுதியில் புயல் உருவாகி உள்ளது. இந்தப் புயலுக்கு மியான்மர் நாடு பரிந்துரைத்த டவ்-தே என்ற பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

இந்தப் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறும் என்றும் அதோடு அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. மேலும் இந்தப் புயல் வடக்கு திசை நோக்கி நகர்ந்து வரும் மே 18 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்கும் என்றும் கரையைக் கடக்கும்போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இந்தப் புயல் பாதிப்பினால் கர்நாடகா, கோவா, கேரளா பகுதிகளில் நாளை முதல் கனமழை மற்றும் மிகக் கனமழை பொழியும் என்றும் குஜராத்தில் நாளை முதல் வரும் 18 ஆம் தேதி வரை மிகக் கனமழை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த புயல் தாக்கத்தினால் தமிழகத்தில் கன்னியாக்குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்கடி போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதுவும் கன்னியாக்குமரி- இரணியில் நேற்று ஒரே நாளில் 28 செ.மீ மழை பதிவாகியுள்ளது. எனவே டவ் தே புயல் தொடர்பாக தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அப்போது பேசிய பாலச்சந்திரன் கர்நாடகா கரையோரத்தில் இருந்து 120 கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளதாகத் தெரிவித்து உள்ளார். இதனால் நேரத்திற்கும் இடத்திற்கும் தகுந்தவாறு நிறத்தை மாற்றிக் கொள்ளக்கூடிய பச்சோந்தி என்ற அர்த்தம் கொண்ட இந்த டவ்-தே புயல் என்ன பாதிப்பை கொண்டு வருமோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More News

தமிழகத்தில் திரைத்துறை பணிகள் ரத்து: ஆர்கே செல்வமணி பேட்டி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதும், நேற்றும் தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்

நேற்று ரூ.25 லட்சம், இன்று ரூ.10 லட்சம்: தல அஜித்துக்கு குவியும் வாழ்த்து!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதால் தமிழக அரசுக்கு தாராளமாக நிதி கொடுத்து உதவி செய்ய வேண்டும்

WAR ROOMஇல் இருந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள டிஎம்எஸ் வணிக வளாகத்தில் WAR ROOM எனப்படும் கட்டளை மையம் ஒன்று இயங்கி வருகிறது.

பிரபல நடிகரின் மனைவில் தூக்கில் தொங்கி தற்கொலை: திருமணமான ஒன்றரை வருடத்தில் விபரீதம்!

பிரபல நடிகர் ஒருவரின் மனைவி திருமணமான ஒன்றரை வருடத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சினிமாவில் காமெடியன், அரசியலில் ஹீரோ....! ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு உதவும் எம்.பி...!

மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளை அழைத்துச்செல்ல  ஆம்புலன்ஸ் வாங்கி தந்துள்ளார், கன்னியாகுமரி எம்.பி விஜய்வசந்த்.