close
Choose your channels

நெட்டிசன்களிடம் உதவி கேட்ட இசையமைப்பாளர் இமான்!

Wednesday, February 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’, தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் பிரபல இசையமைப்பாளர் டி இமான். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்த போதிலும் புதிய பாடகர்களை அறிமுகப்படுத்துவதில் விருப்பமுள்ளவர்

சமீபத்தில் இன்டர்நெட்டில் வைரல் ஆகிய ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி திருமூர்த்தி என்பவரை பாராட்டினார் என்பதும் அவருக்கு தான் இசையமைக்கும் படம் ஒன்றில் பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் இரண்டு நபர்களின் புகைப்படங்களை பதிவு செய்து அந்த இரண்டு நபர்களை கண்டுபிடிக்க உதவி செய்யுமாறு நெட்டிசன்களிடம் கேட்டுள்ளார். முதல் படத்தில் உள்ளவர் தனக்கு யார் என்று தெரியவில்லை என்றும் ஆனால் மிக அருமையாக பாடுகிறார் என்றும் அவரை கண்டுபிடிக்க உதவி செய்தால் அவருக்கு வாய்ப்பு கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்

அதேபோல் இரண்டாவது படத்தில் உள்ளவர் ராஜேஷ் எல்லோரும் அவர் பாடிய ஒரு பாடல் கடந்த சில வருடங்களுக்கு முன் சமூக வலை தளங்களில் மிகப்பெரிய வைரல் ஆகியது என்றும் அவருக்கும் தான் பாடுவதற்கு வாய்ப்புக் கொடுக்க இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த போதிலும் புதியவர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்ட டி இமான் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos