close
Choose your channels

இணையத்தில் வைரலான மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பு அளிக்கும் டி.இமான்

Sunday, September 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இணையதளங்களில் ஒரு சில மோசமான விஷயங்கள் இருந்தாலும் கோடிக்கணக்கான நல்ல விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. குறிப்பாக ஒருவரது திறமையை ஒரே நாளில் உலகமே அறியும் வகையில் உதவி செய்து வருவது இணையம் மட்டுமே. அந்த வகையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த பார்வையற்ற சிறுவன் ஒருவனின் பாட்டு பாடும் திறமை இன்று உலகம் முழுவதும் போய் சேர்ந்தது மட்டுமின்றி. இசையமைப்பாலர் டி. இமானின் இசையில் பாடவும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணகிரியை சேர்ந்த திருமூர்த்தி என்ற பார்வையற்ற சிறுவன் அஜித் நடித்த ’விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ’கண்ணான கண்ணே’ என்ற பாடலை பாடிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலானது. இந்த வீடியோவை டி.இமான் அவர்களுக்கும் இணையதள பயனாளிகள் அனுப்பி உள்ளனர். இந்த வீடியோவை பார்த்த இசையமைப்பாளர் டி இமான் அந்த சிறுவன் யார்? என்ற தகவலை தனக்கு தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட இணையதள வாசிகள் உடனடியாக செயல்பட்டு அந்த சிறுவனின் முழு விபரங்களை டி இமான் அவர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விவரங்களை பெற்ற டி.இமான், ‘சிறுவன் குறித்த விவரம் கிடைத்ததாகவும் விரைவிலேயே அந்த சிறுவனை தான் இசையமைக்கும் திரைப்படத்தில் பாட வைக்க உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார். இதனை அடுத்து விரைவில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான அந்த சிறுவன் டி இமான் இசையில் பாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது வீடியோவை இணையதளத்தில் வைரலாக்கிய நெட்டிசன்களுக்கு அந்த சிறுவன் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.