ஆட்டோ டிரைவரை பாடகராக்கிய டி.இமான்

  • IndiaGlitz, [Tuesday,June 27 2017]

ஒரு காலத்தில் இசைத்துறையிலும், திரையிசை துறையிலும் நுழைய வேண்டுமானால் சிறுவயதில் இருந்தே இசைஞானம் பெற்றவர்கள் மட்டுமே வரமுடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் காலம் மாற மாற, கேள்வி ஞானம் உள்ளவர்களும் இசையில் சாதனை புரியும் நிலை ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக தொலைக்காட்சிகளில் பாடல் போட்டிகள் நிகழ்ச்சிகள் நடந்து வருவதால் அதில் வெற்றி வெறும் பலர் திரைத்துறையிலும் நுழைந்து தங்கள் திறமையை காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் உதயநிதி நடித்த 'பொதுவாக என்மனசு தங்கம்' படத்தில் இசையமைத்துள்ள டி.இமான், ஒரு பாடலை ஆட்டோ டிரைவரை பாட வைத்து அசத்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இசை நிகழ்ச்சியில் ஆட்டோ டிரைவர் ரமேஷ் பாடியபோது அவருடைய இசைத்திறமையை கண்ட டி.இமான், இந்த படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

கொடுத்த வாய்ப்பை ரமேஷ் நன்கு பயன்படுத்தி அருமையான கிராமிய பாடல் ஒன்றை பாடியுள்ளதாகவும், நாளை வெளியாகும் இந்த படத்தின் பாடல்களில் அந்த பாடல் இடம்பெற்றுள்ளதாகவும் டி.இமான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கடவுள் அருளால் ரமேஷ் இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

தனுஷூக்கு நல்ல மனைவியாக இருப்பேன். அமலாபால்

தனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'விஐபி 2' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமலாபால் பேசியதாவது:

ரஜினியை வெடிக்காத பட்டாசு என கூறிய சீமானுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி

தமிழக அரசியல் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியையே சுற்றியே வருகிறது. அவர் அரசியலுக்கு தனிக்கட்சி ஆரம்பித்து வந்தால் பல கூட்டணிகள் உடையவும், மாறவும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இதை யாராவது நிரூபித்தால் சினிமாவை விட்டு விலக தயார்! சிம்பு சவால்

சிம்பு மீதான பொதுவான குற்றச்சாட்டு அவர் படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவார் என்பது தான்.

இதை யாராவது நிரூபித்தால் சினிமாவை விட்டு விலக தயார்! சிம்பு சவால்

சிம்பு மீதான பொதுவான குற்றச்சாட்டு அவர் படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவார் என்பது தான்.

மோடி மனைவியை காணாமல் அதிர்ச்சி அடைந்த அமெரிக்க அதிகாரிகள்

பாரத பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா உள்பட மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை செய்து வருகிறார்.