'தலைவர் 168' படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,November 13 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அவர் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

’தலைவர் 16’8 என்று அழைக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் யார்? என்ற கேள்வி ரஜினியின் ரசிகர்கள் மனதில் எழுந்தது. இந்த நிலையில் இதுகுறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. ’தலைவர் 168’ படத்தின் இசையமைப்பாளராக டி.இமான் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது

இதனை அடுத்து டி.இமான் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: கடவுளின் அருளால் இந்த மேஜிக் நடந்துள்ளது என்றும் தலைவர் படத்தில் இசையமைப்பது என்பது தனக்கு கிடைத்த வரம் என்றும், மேலும் சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் சிவா அவர்களுடன் மீண்டும் இணைவதில் தனக்கு மிக்க மகிழ்ச்சி என்றும் இந்த வாய்ப்பை தந்த கடவுளுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முந்தைய படமான ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்திற்கும், சிறுத்தை சிவாவின் முந்தைய படமான விஸ்வாசம் படத்திற்கும் டி இமான் இசையமைக்க நிலையில் தற்போது சன்பிக்சர்ஸ்-சிவா இணைந்து உள்ள படத்திற்கும் டி.இமான் அவர்களே இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

நான் என்ன அஜித், விஜய் படத்தையா இயக்கியுள்ளேன்: சிம்பு படத்தயாரிப்பாளர் ஆதங்கம்

சிம்பு நடிக்கவிருக்கும் 'மாநாடு' என்ற படத்தை தயாரிக்கவிருக்கும் இயக்குனர் சுரேஷ் காமாட்சியின் இயக்கத்தில் சமீபத்தில் 'மிக மிக அவசரம்' என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது

பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய இரண்டு திரைப்படங்களை தொடர்ச்சியாக இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித், தற்போது ஆர்யா நடிக்கும் படம் ஒன்றை இயக்க ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்

ப்ரியா பவானிசங்கரின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவர் ப்ரியா பவானிசங்கர். எஸ்ஜே சூர்யாவின் 'மான்ஸ்டர்', கடைக்க்குட்டி சிங்கம் உள்ளிட்ட ஒரு சில வெற்றிபடங்களில் நடித்த ப்ரியா பவானிசங்கர்

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் த்ரில் பட இயக்குனர்?

தளபதி விஜய், மாளவிகா மேனன், ஆண்ட்ரியா உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ்

சல்மான்கான் படத்தில் பரத் வில்லனா? அதிகாரபூர்வ தகவல்கள்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கும் 'ராதே' என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் தமிழ் நடிகர் பரத் நடித்த உள்ளதாக வெளிவந்த செய்தியில் ஏற்கனவே பார்த்தோம்.