close
Choose your channels

'நீங்களா சொல்லிட்டிங்கன்னா விட்ருவேன்': நடன இயக்குனர் பிருந்தாவின் 'தக்ஸ்' டிரைலர்..!

Friday, January 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கிய முதல் திரைப்படமான ’ஹேய் சினாமிகா’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் இயக்கத்தில் உருவாகி வரும் இரண்டாவது திரைப்படம் ’தக்ஸ்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிறைக்குள் இருக்கும் அதிரடி ஆக்சன் காட்சிகளாக உள்ளது. சிறைக்குள் ஹீரோவே கைதியாக அறிமுகப்படுத்தப்படுவதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 'தக்ஸ்' திரைப்படம் உருவாகியுள்ளது. ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன், சரத் அப்பானி மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். பிரியேஷ் குருசுவாமி ஒளிப்பதிவில் பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பில் ருவான இந்த படத்தை HR பிக்சர்ஸ் - ரியா ஷிபு தயாரித்துள்ளனர். RRR படத்தின் ப்ரோமோ எடிட்டிங் மூலம் பிரபலமான எடிட்டர் பிரவீன் ஆண்டனி, இந்த ஆக்‌ஷன் படத்தை எடிட் செய்துள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'புலி', 'இருமுகன்', 'ஏபிசிடி', 'சாமி ஸ்கொயர்' போன்ற பெரிய திரைப்படங்களையும், சுமார் 100க்கும் மேற்பட்ட பல்வேறு மொழி திரைப்படங்களையும் விநியோகித்த சிபு தமீன்ஸின் மகள் தான் ரியா சிபு இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.