close
Choose your channels

நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்: எந்த படத்தில் தெரியுமா?

Friday, October 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல டான்ஸ் மாஸ்டர் கலா சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல டான்ஸ் மாஸ்டர் கலா என்பதும் இவர் 4000 பாடல்களுக்கு மேல் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார் என்பதும், தேசிய விருது, தமிழக அரசின் உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சின்னத்திரையிலும் கலா மாஸ்டர் டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக பணிபுரிந்துள்ளார். குறிப்பாக கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ’மானாட மயிலாட’, மலையாள டிவியில் ஒளிபரப்பான ’சூப்பர் டான்சர்’ உள்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டான்ஸ் மாஸ்டர் கலா அவர்கள் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த கேரக்டருக்கு கலா மாஸ்டர் தான் பொருத்தமாக இருப்பார் என்று விக்னேஷ் சிவன் முடிவு செய்ததை அடுத்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க கலா மாஸ்டர் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.