close
Choose your channels

ஹீரோவாக டான்சிங் ரோஸ் நடிக்கும் படம்.. மோஷன் போஸ்டர் வீடியோ ரிலீஸ்..!

Saturday, June 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் என்ற அட்டகாசமான கேரக்டரில் நடித்த நடிகர் சபீர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

டான்சிங் ரோஸ் நடிகர் சபீர் நாயகனாகவும் மிர்னா நாயகியாகவும் நடித்து வரும் இந்த படத்தை விக்ரம் ஸ்ரீதரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் சற்று முன் வெளியான மோஷன் போஸ்டர் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சபீர், மிர்னா, வரலட்சுமி, இந்திரஜித், பொற்கொடி, தீப்தி உள்பட பலர் நடித்துள்ளனர். ‘பர்த் மார்க்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை இயக்குனர் பா ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.