close
Choose your channels

வாழ்க்கையோ, சினிமாவோ ஹீரோ ஜெயிக்கனும்னா வில்லன் வேணும்: RPM டிரைலர்..!

Thursday, May 1, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி இறப்பதற்கு முன்னர் நடித்திருந்த 'RPM' என்ற திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. தற்போது இந்த ட்ரெய்லர் வீடியோ இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது.

இந்த படத்தில், உடல் உறுப்புகளை திருடி வெளிநாடுகளுக்கு கோடி கணக்கில் விற்பனை செய்யும் கும்பலின் தலைவனாக டேனியல் பாலாஜி நடித்துள்ளார். மேலும், அப்பாவி பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் காட்சிகளும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன.

"ஒரு சின்ன மிஸ்டேக் கூட இல்லாமல் கொலை செய்யும் கும்பலை போலீசார் பிடித்தார்களா? இந்த கும்பல் செய்த குற்றங்கள் என்னென்ன என்பதைக் கண்டுபிடிப்பதே கதையின் மையம்" என்பது ட்ரெய்லரிலிருந்து வெளிப்படுகிறது.

மேலும் "வாழ்க்கையோ சினிமாவோ ஹீரோ ஜெயிக்கணும்னா வில்லன் வேணும்" மற்றும் "நாங்கள் கடவுளுக்கு சமம்ம், ஒரு மனிதனின் உறுப்பை எடுத்து இன்னொருவருக்கு கொடுக்கிறோம்" எனும் வசனங்கள், படத்தின் விறுவிறுப்பை கூட்டுகின்றன.

முழுமையான ஆக்ஷன் மற்றும் திரில்லர் திரைப்படமாக 'RPM' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

டேனியல் பாலாஜி இளவரசு, தேவதர்ஷினி, கோவை சரளா, ஒய்ஜி மகேந்திரன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை பிரசாத் பிரபாகர் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment