close
Choose your channels

'தர்பார்' நடிகரின் மகள் திருமணம்.. ரூ.100 கோடிக்கு குவிந்த பரிசுகள்?

Thursday, January 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ’தர்பார்’ படத்தில் நடித்த நடிகரின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் இந்த திருமணத்திற்கு சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள பரிசு பொருட்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

’தர்பார்’ படத்தில் வில்லனாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி. இவருடைய மகளும் நடிகையுமான அதியா ஷெட்டிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலுக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு திரையுலக மற்றும் கிரிக்கெட் உலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு கோடி கணக்கில் பரிசு பொருட்கள் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் கட்டமாக சுனில் ஷெட்டி தனது மகளுக்கு மும்பையில் உள்ள அடுக்குமாடு குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டை பரிசாக அளித்துள்ளார். இந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி என்று கூறப்படுகிறது.

சுனில் ஷெட்டியின் நெருங்கிய நண்பரான சல்மான்கான் 1.64 கோடி மதிப்புள்ள ஆடி காரை பரிசளித்துள்ளார். விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிகள் கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு 2.17 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை பரிசளித்துள்ளனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 80 லட்சம் மதிப்புள்ள கவாஸாகி நின்ஜா பைக்கை பரிசளித்துள்ளார்.

மேலும் சுனில் ஷெட்டியின் நெருங்கிய நண்பரான ஜாக்கி ஷெராப் ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ள வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார். பிரபல நடிகர் அர்ஜூன் கபூர் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள வைர வளையல்களை மணப்பெண் அதியாவுக்கு வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து சுனில் ஷெட்டியின் மகள் திருமணத்திற்கு மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.