தர்பார், பட்டாஸ் ஒரே நாளில் ரிலீஸா? பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Saturday,December 07 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெற உள்ளது. திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளும் இந்த விழாவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினர்களிடமிருந்து செய்திகள் கசிந்துள்ளது.

இந்த நிலையில் ரஜினியின் ’தர்பார்’ திரைப்படமும் தனுஷின் ‘பட்டாஸ்’ திரைப்படமும் ஒரே நாளில் அதாவது பொங்கல் தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த செய்தியை பட்டாஸ் படக்குழுவினர் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ரஜினியின் ’தர்பார்’ திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் விருந்தாகவும், அதற்கு அடுத்த வாரம் அதாவது ஜனவரி 16ஆம் தேதியும் பட்டாஸ் திரைப்படமும் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரு படங்களின் ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இரு படங்களின் குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த மகன் விஜயபிரபாகரனுக்கும் கோவை தொழிலதிபர் மகள் கீர்த்தானவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக புகைப்படங்களுடன் கூடிய செய்தி வெளியாகியுள்ளது

தீ வைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் இளம்பெண் மரணம்: என்ன செய்ய போகிறது உபி அரசு?

உத்திரப்பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

ஐதராபாத் என்கவுண்டர்: ஏ.ஆர்.முருகதாஸ், சமந்தா, வரலட்சுமி கூறியது என்ன?

ஐதராபாத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வர் இன்று அதிகாலை போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்

போலீஸ் உடையில் சென்று இளம்பெண்ணை மிரட்டிய கள்ளக்காதலி: சென்னையில் பரபரப்பு

சென்னை தி நகர் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவரை போலீஸ் உடையில் மிரட்டிய பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தாடி வைத்திருந்ததால் வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6.67 லட்சம் இழப்பீடு.

தாடி வைத்திருந்த காரணத்திற்காக வேலை கொடுக்க மறுத்த நிறுவனம் ஒன்று, பாதிக்கப்பட்டவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ஆறரை லட்சம் ரூபாய் நஷ்டஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம்