close
Choose your channels

ரஜினியின் 'தர்பார்' படத்தின் புதிய அப்டேட்

Friday, November 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ’தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பார்கள் என தெரிகிறது.

இந்த நிலையில் இசை வெளியீட்டுக்கு முன்பாகவே இந்த படத்தில் இரண்டு பாடல்கள் சிங்கிள் பாடலாக வெளி வர இருப்பதாகவும், முதல் பாடலான ’சும்மா கிழி’ என்ற பாடல் வரும் 27ம் தேதி வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

ரஜினிகாந்தின் அறிமுகப் பாடலான இந்தப் பாடலை எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படத்தில் எஸ்பிபி பாடிய மரண மாஸ் பாடல் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த பாடலும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்ள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.