'தர்பார்' நடிகைக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

  • IndiaGlitz, [Saturday,April 03 2021]

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரனோ வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களும், தமிழகத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர்களும் தினசரி கொரனோ வைரசால்பாதிக்கப்பட்டு வருகின்றனர்

இந்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலகினர், அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் கொரனோ வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

அந்த வகையில் ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் கொரனோ வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது ’தர்பார்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகையும் கொரனோ வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். ’தர்பார்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். இவர் தற்போது கொரனோ வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் குணமாகிவிடுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

மேலும் தனக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ குழுவினர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பொதுமக்கள் அனைவரும் கவனமாக மாஸ்க் அணிந்து இருக்கவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More News

கமல் அறிக்கை: அதிர்ச்சியில் எதிரணியினர்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் அந்த தொகுதியில் 'யார் வென்றாலும் மக்கள் வென்றாகவே பொருள் என்று

விஜய்சேதுபதியின் அடுத்த பட டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள 'துக்ளக் தர்பார்' 'கடைசி விவசாயி' 'மாமனிதன்' 'லாபம்' 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன

குழந்தை நட்சத்திரமாக நடித்த டிவி சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா? ரசிகர்கள் ஆச்சரியம்!

பாக்யராஜ் இயக்கி நடித்த 'முந்தானை முடிச்சு' உள்பட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை சுஜிதா. அதன்பின்னர் தொலைக்காட்சி சீரியல்களிலும்

சீனியரை முந்திய ஜூனியர்...! குமரியில் விஜய்வசந்துக்கு குவியும் ஆதரவுகள்...!

காங்கிரஸ் சார்பாக களமிறங்கும் விஜய்வசந்த் காலில் வீக்கமிருந்தும், மக்களிடையே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

திமுக வேணாம் போடா ...! நடிகை கவுதமி காரசார ட்வீட்...!

பெண்களை இழிவுபடுத்தும் திமுகவினருக்கு அரசியலில் இடமில்லை என்று நடிகை கவுதமி காரசாரமாக பதிவிட்டுள்ளார்.