ரஜினியின் 'தர்பார்' படப்பிடிப்பு முடிவது எப்போது? ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,June 12 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் வசன காட்சிகளின் படப்பிடிப்பு இம்மாதம் மூன்றாம் வாரத்துடன் முடிவடையவுள்ளதாக இணையதளங்களில் செய்தி வெளியானது. ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ள இயக்குனர் முருகதாஸ், 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் வரை நடைபெறும் என கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக படக்குழுவினர் சுவிட்சர்லாந்து செல்லவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வரும் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் இந்த 'தர்பார்' திரைப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இளம் இசைப்புயல் அனிருத் இசையில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் லைகாவின் தயாரிப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது. 
 

More News

'சிந்துபாத்' படத்தின் கதை இதிகாச புராணக்கதையா?

விஜய்சேதுபதி நடித்த 'சிந்துபாத்' திரைப்படத்தின் இசை வெளீயீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய்சேதுபதி பேசியதாவது:

ரஜினி, கமல் ஆதரவு யாருக்கு? விஷால் விளக்கம்

நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் விஷாலின் பாண்டவர் அணி மற்றும் பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகளில் இருந்து போட்டியிடும்

பாக்யராஜ் அணியின் 3 வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடியா?

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி மற்றும் பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி

வடிவேலுக்கு கண்டனம் தெரிவித்த மற்றொரு இயக்குனர்!

ஒரு திரைப்படத்திற்கு இயக்குனர் என்பவர் முதுகெலும்பு போன்றவர். அவர் இல்லாமல் ஒரு படம் உருவாக முடியாது. எனவேதான் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி முதல் முன்னணி நடிகர்கள்

பாக்யராஜ் ஓட்டு கேட்க வந்தால் விரட்டி அடிப்போம்: நாடக நடிகர் ஆவேசம்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.