close
Choose your channels

தர்பார் அப்டேட்: டுவிட்டர் பயனாளியால் ஷாக் ஆன பாடலாசிரியர் விவேக்

Tuesday, November 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தர்பார்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ’சும்மா கிழிகிழி’ என்ற பாடல் நாளை வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பாடலின் முதல் இரண்டு வரிகள் இன்று இரவு ஏழு மணிக்கு வெளியாக இருப்பதாக இந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்

ஆனால் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று பாடலாசிரியர் அறிவித்த ஒரு சில வினாடிகளில் அந்த இரண்டு வரிகளை ட்விட்டர் பயனாளி ஒருவர் அவருடைய டுவிட்டின் கமெண்ட் பகுதியிலேயே பதிவு செய்துள்ளார்

கருப்பு தோலோட சிங்கம் வரும் சீனோட
இடமே பத்திக்கும் கேட்டு பாரு சும்மா கிழி கிழி

என்ற இரண்டு வரிகளை அவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு நிச்சயம் விவேக்கிற்கு அதிர்ச்சியை அளித்திருக்கும். பாடலாசிரியர் விவேக் இன்று இரவு 7 மணிக்கு வெளியிட இருப்பதாக கூறிய அந்த இரண்டு வரிகள் இவை தானா? அல்லது வேறு வரிகளா? என்பதை 7 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.