close
Choose your channels

தர்புகா சிவா இயக்கத்தில் 'முதல் நீ முடிவும் நீ': ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Saturday, January 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் உருவான ’முதல் நீ முடிவும் நீ’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜதந்திரம், தொடரி உள்பட ஒருசில படங்களில் நடித்த தர்புகா சிவா, கிடாரி, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தர்புகா சிவா இயக்கத்தில் உருவான முதல் படம் ’முதல் நீ முடிவும் நீ’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்புகா சிவாவின் இயக்கத்தில் உருவான ‘முதல் நீ முடிவும் நீ’ என்ற திரைப்படம் ஜீ தமிழ் ஓடிடியில் ஜனவரி 21-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கடந்த 90களில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களின் கதையம்சம் கொண்டது என்பதும் இந்த படத்தை பார்க்கும்போது ஒவ்வொருவரும் தங்களுடைய பள்ளி வாழ்க்கைக்கு திரும்பி போகும் அளவுக்கு உணர்ச்சிகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்த படத்தில் அமிர்தா, பூர்வ ரகுநாத், ஹரிஷ், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன், வருண் ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுஜித்சரங் ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பில் உருவாகி இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.