கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் வெளியான மாஸ் போஸ்டர்: இணையத்தில் வைரல்!

  • IndiaGlitz, [Monday,October 17 2022]

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’தசரா’. நானி ஹீரோவாக நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு ’தசரா’ படக்குழுவினர் மாஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கீர்த்திசுரேஷ் வெண்ணலா என்ற கேரக்டரில் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படம் கோதாவரிகானியில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் உணர்ச்சிகரமான கதை ஆகும்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்ட படைப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார்.

More News

பிரபு-ராம்குமார் மீதான சிவாஜி மகள்களின் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

 நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன்களான ராம்குமார் மற்றும் பிரபு ஆகியோர் மீது சிவாஜி கணேசன் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி பதிவு செய்த வழக்கில் முக்கிய உத்தரவை சென்னை ஐகோர்ட் பிறப்பித்துள்ளது. 

கிரிக்கெட் கடவுளை சந்தித்த இசைக்கடவுள்: அபூர்வ சந்திப்பின் புகைப்படம் வைரல்!

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று போற்றப்படும் சாதனையாளரை இசை உலகின் கடவுள் என்று போற்றப்படுபவர் சந்தித்துள்ள அபூர்வ சந்திப்பின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தம்பியை போலவே அக்காவுக்கும் அரண்மனையில் தான்.. விஜய் நாயகியின் திருமண ஏற்பாடு!

விஜய் படத்தில் நடித்த நடிகையின் சகோதரர் திருமணம் அரண்மனையில் நடந்த நிலையில் அதே அரண்மனையில் நடிகையின் திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

மோகன்லாலில் 'லூசிஃபர்' இரண்டாம் பாகம் உருவாகின்றதா?

 மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'லூசிஃபர்' . இந்த படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது என்பது வெறும் 30 கோடி

சன்னிலியோனின் அடுத்த தமிழ்ப்படம்.. 28 ஆண்டுகள் கழித்து இணையும் ஹீரோ-ஹீரோயின்!

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது 'வீரமாதேவி' மற்றும் 'ஓ மை கோஸ்ட்' ஆகிய இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இதில் 'ஓ மை கோஸ்ட்'