கமல்ஹாசனின் 'தசாவதாரம்' பட நடிகைக்கு 6 மாதம் சிறை தண்டனை.. சென்னை நீதிமன்றம் உத்தரவு..!

  • IndiaGlitz, [Friday,August 11 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘தசாவதாரம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகைக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நடித்த ’மன்மத லீலை’ ’சலங்கை ஒலி’ ’நினைத்தாலே இனிக்கும்’ ’தசாவதாரம்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா. இவர் அரசியலிலும் இன்னும் சில கட்சிகளில் இருந்து உள்ளார் என்பதும் தற்போது அவர் பாரதிய ஜனதாவில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஜெயப்பிரதாவுக்கு சென்னையில் ஒரு திரையரங்கம் இருந்த நிலையில் அந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டது.

தொழிலாளர்களின் இந்த புகார் குறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு சில ஆண்டுகளாக விசாரணை நடந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் நடிகையும் முன்னாள் எம்பியுமான ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனை அடுத்து நடிகை ஜெயப்ரதா இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிகினி உடை.. தண்ணீருக்குள் ஜாலி.. அமலாபாலின் கோவா போட்டோஷூட்..!

நடிகை அமலாபால் கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்

'ஜெயிலர்' வசந்த் ரவியின் அடுத்த படத்தில் அஜித் பட நடிகை தான் நாயகியா? இன்னொரு ஹீரோயின் யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு சினிமா

இளம் இசையமைப்பாளர், பிரபல தொழிலதிபர் மகளை திருமணம் செய்கிறாரா? வேகமாக பரவும் வதந்தி..!

தமிழ் திரை உலகின் முன்னணி இளம் இசையமைப்பாளர் ஒருவர் பிரபல தொழிலதிபர் மகளை திருமணம் செய்ய இருப்பதாக சமூக வலைதளங்களில்  ஒரு செய்தி வேகமாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

நடிகை லட்சுமி மேனனுடன் திருமணமா? விஷால் அளித்த விளக்கம்..!

நடிகர் விஷால், நடிகை லட்சுமிமேனனை திருமணம் செய்ய போவதாக ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்து விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

முதல்முறையாக இணையும் கமல்ஹாசன் - விஜய்.. 2ஆம் பாகத்தை பிரமாண்டமாக்க திட்டம்..!

முதல் முறையாக உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் தளபதி விஜய் இணைந்து நடிக்க உள்ளதாகவும் இந்த படம் விஜய் நடித்த படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.