குடும்பச் சொத்தில் ஆண்களைப்போல பெண்களுக்கும் சமபங்கு– உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!!

  • IndiaGlitz, [Tuesday,August 11 2020]

இந்தியாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வாரிசுரிமை சட்டத்தின் அடிப்படையில் பெற்றோரின் சொத்தில் பெண் பிள்ளைகளுக்கும் சமபங்கு உண்டு எனச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் பலர் வழக்குத் தொடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று, ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு உண்டு. அதைப்போல பாகம் பிரிக்கப்படாத குடும்பச் சொத்திலும் பெண்களுக்கு சமபங்கு வழங்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்தத் தீர்ப்பில் “பெற்றோருக்கு ஒருமுறை மகள் என்றால் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு மகள்தான். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. பூர்வீகச் சொத்தில் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கு உரிமை உண்டு” என்று நீதிமன்றம் கருத்துத் தெரிவித்து உள்ளது. காரணம் 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வாரிசுரிமை சட்டத்திருத்தத்தின் படி 25.3.1989 க்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட பெண்கள் பூர்வீகச் சொத்தில் உரிமை கோரமுடியாது என்று இருக்கிறது. இந்தச் சட்டத் திருத்ததையும் மாற்றும் விதமாக பூர்வீகச் சொத்தில் எப்போதும் பெண்களுக்கு சமபங்கு உண்டு எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தியாவில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்குவது குறித்து நடைமுறையில் இருந்த “இந்து பெண்கள் சொத்து சட்டம்” யின்படி பிறந்த வீட்டில் பெண்களுக்கு தங்குவதற்கு மட்டுமே உரிமை இருந்தது. சொத்தில் உரிமை கொண்டாட உரிமை கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின் 1956 இல் நிறைவேற்றப் பட்ட இந்து வாரிசுச் சட்டப்படி பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. இந்தச் சட்டத்திருத்தம் முறைப்படி அமல்படுத்தப் படாததால் 2005 இல் மீண்டும் பெண்களுக்குச் சொத்துரிமையை வலியுறுத்து விதமாக வாரிசுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் பெண்பிள்ளைகளுக்கு ஆண்களைப் போல சொத்தில் சமபங்கு உண்டு என்பதோடு மட்டுமல்லாது பிரிக்கப்படாத குடும்பச் சொத்திலும் சமவுரிமை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை இந்தியாவில் உள்ள பல தலைவர்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

லெபனான் விபத்து!!! மக்கள் எதிர்ப்பு வலுத்தால் அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு!!!

மேற்காசிய நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த 4 ஆம் தேதி 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறிய விபத்தில் இதுவரை 160 பேர் உயிரிழந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கள்ளக்குறிச்சியில் ரூ.70 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்த தமிழக முதல்வர்!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா பரவல் தடுப்பு திட்டங்களுக்காகத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

11 ஆம் வகுப்பில் சேர விண்ணப்பித்து இருக்கும் ஜார்கண்ட் மாநிலக் கல்வி அமைச்சர்!!! பரபரப்பு தகவல்!!!

ஜார்கண்ட் மாநிலத்தின் கல்வி அமைச்சராகவும் மனிதவள மேம்பாட்டுத் துறையின் அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் ஜகர்நாத் மஹ்தோ (53) நேற்று 11 வகுப்பில் சேர விண்ணப்பித்து

லாக்டவுன்: இந்தியாவில் மாட்டிக்கொண்ட அயல்நாட்டுப் பெண்ணின் சுவாரசியம் மிக்க அனுபவம்!!!

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருக்கிறார் தெரசா சொரியானோ மஸ்க்கோஸ் என்ற பெண்மணி.

மீராமிதுனுக்கு தகுந்த பதிலடி கொடுத்த சூர்யா!

கடந்த சில நாட்களாக சூப்பர் மாடல் அழகி மீராமிதுன் தனது டுவிட்டர் பக்கத்தில் திரையுலக பிரபலங்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.