ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் டேவிட் வார்னருக்கு இப்படியொரு சிக்கலா?

14 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்து இருக்கிறது. இதற்கான வீரர்களை கடந்த 18 ஆம் தேதி சென்னையில் நடந்த ஏலத்தில் 8 அணிகளும் தேர்வு செய்து கொண்டன. இதையடுத்து ஐபிஎல் போட்டிகளுக்கான தேதி குறித்த எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹைத்ராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர், தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இன்னும் 6-9 மாதங்களுக்கு விளையாட முடியுமா? என்பதே சந்தேகம் எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இந்தப் பதிவினால் இவர் ஐபிஎல் போட்டிகளில் இவர் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. மேலும் ஹைத்ராபாத் அணிக்கு யார் கேப்டனாக இருப்பார்கள் என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக ஆஸ்திரேலிய-இந்திய தொடரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியின்போது டேவிட் வார்னருக்கு வயிற்றுப் பகுதியில் அடிப்பட்டது. இதனால் போட்டி நடந்து கொண்டு இருக்கும்போதே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து வந்த அவர் ஒருசில உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டார். இருப்பினும் தற்போது தனக்கு ஏற்பட்டு இருக்கும் காயம் முழுமையாக குணமாக வில்லை. ஒரு பந்தை குனிந்து கூட என்னால் எடுக்க முடியவில்லை. இதற்கான சிகிச்சை பெற்று நான் மீண்டும் விளையாடுவதற்கு 6-9 மாதங்கள் கூட ஆகலாம் எனத் தெரிவித்து இருக்கிறார்.

இதனால் ஐபிஎல் போட்டிகளில் டேவிட் வார்னர் விளையாடுவது கேள்விக் குறியாகி இருக்கிறது. இதையடுத்த ஹைத்ராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு யார் கேப்டனாக இருந்து வழிநடத்துவது என்ற புது சிக்கலும் உருவாகி இருக்கிறது.