இவரை என்னால் பாராட்டால் இருக்க முடியாது: நடராஜன் குறித்து ஆஸ்திரேலிய வீரர்!

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி அதன் பின்னர் ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக யார்க்கர்கள் வீசி புகழ்பெற்ற நடராஜன் தற்போது இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக மாறியுள்ளார்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நடராஜனின் அபாரமான பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்ததாக கேப்டன் விராத் கோஹ்லியும், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் 

இந்த நிலையில் நடராஜனின் திறமையை வெளிக்கொண்டு வந்த ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர், நடராஜனுக்கு தனது வாழ்த்தை தெரிவித்து தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு செய்துள்ளார் 

களத்தில் இருக்கும் போது ஒவ்வொரு வீரரையும் நாங்கள் மதிக்கின்றோம். நாங்கள் தொடரை இழந்த போதிலும் நடராஜனின் ஆட்டத்தை என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர் நல்ல விளையாட்டு வீரர். விளையாட்டை மிகவும் நேசிப்பவர். ஆஸ்திரேலிய பயணத்தில் இந்தியாவுக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமாகி தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். வார்னரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

More News

மகள் மரணத்தில் சந்தேகம்: சித்ராவின் தாய் கண்ணீர் பேட்டி

சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலையில் சென்னை நாசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டல் அறை ஒன்றில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 

பாலாஜியை பழிவாங்க அர்ச்சனாவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்ற 'புதிய மனிதா' என்ற டாஸ்க்கில் பாலாஜி அணி மனிதர்கள் அணியாகவும், அர்ச்சனா அணி ரோபோ அணியாகவும் விளையாடினார்கள்.

'மாநாடு' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்: சிம்பு ரசிகர்கள் உற்சாகம்!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய 'ஈஸ்வரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திடீரென டிவிட்டரில் அதிகளவு ட்ரோல் ஆகும் பிரதமர்… காரணம் தெரியுமா???

நேற்று முதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டிவிட்டரில் அதிகளவு ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

சாதி வாரியான கணக்கெடுப்புக்கு புதிய ஆணையம்… பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளித்த தமிழக அரசு!!!

தமிழகத்தில் சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தி அதன் அறிக்கைகளை சமர்ப்பிக்க ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் புதிய ஆணையம் அமைக்கப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அ