தெலுங்கு பட புரமோஷனுக்கு வந்த வார்னருக்கு கசப்பான அனுபவம்.. எக்ஸ் தளத்தில் அதிருப்தி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தெலுங்கு படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள பிரபல முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர், இந்த படத்தின் புரமோஷனுக்காக வந்த போது தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர் நிதின் மற்றும் ஸ்ரீலிலா நடித்த "ராபின்வுட்’ என்ற திரைப்படத்தை வெங்கி குடுமுலா இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த நிலையில், வரும் 28ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது, இதில் பங்கேற்க ஆஸ்திரேலியாவில் இருந்து டேவிட் வார்னர் வருகை தந்தார்.
அப்போது, அவர் விமானியே இல்லாததால் ஏர் இந்தியா விமானத்தில் மணி கணக்கில் காக்க வைக்கப்பட்டதாக தனது எக்ஸ் பக்கத்தில் வேதனையுடன் பதிவு செய்திருந்தார். "விமானியே இல்லாமல், விமானத்தின் உள்ளே ஏன் பயணிகளையும் உள்ளே ஏறச் செய்கிறார்கள்?" என்றும் அவர் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், ஏர் இந்தியா இதற்கு விளக்கம் அளித்துள்ளது. மோசமான வானிலை காரணமாகத்தான் விமானம் தாமதமாக புறப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
DAVID BHAI is here 🤩🤩@davidwarner31 arrives in Hyderabad for the #RobinhoodTrailer launch & Grand Pre-Release Event today 💥💥#Robinhood GRAND RELEASE WORLDWIDE ON MARCH 28th.@actor_nithiin @sreeleela14 @VenkyKudumula @gvprakash #RajendraPrasad @vennelakishore… pic.twitter.com/r0oCw6vgAM
— Mythri Movie Makers (@MythriOfficial) March 23, 2025
@airindia we’ve boarded a plane with no pilots and waiting on the plane for hours. Why would you board passengers knowing that you have no pilots for the flight? 🤦♂️🤦♂️
— David Warner (@davidwarner31) March 22, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments