'மாநாடு' ரிலீசுக்கு கடைசி நேரத்தில் உதவி செய்தவர் இவரா? வைரலாகும் டுவிட்!

  • IndiaGlitz, [Thursday,November 25 2021]

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று ரிலீஸ் ஆகியது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த படம் இன்று ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட நிலையில் விடிய விடிய நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இன்று காலை 8 மணி முதல் ‘மாநாடு’ திரைப்படம் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடைசி நேரத்தில் ‘மாநாடு’ திரைப்படம் ரிலீஸ் செய்ய ஒரு சில திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் உதவியதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் ‘மாநாடு’ திரைப்படம் ரிலீசுக்கு உதவியவர்களில் ’மங்காத்தா’ திரைப்பட தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியும் ஒருவர் என டுவிட்டரில் செய்தி கசிந்தது.

இதற்கு பதிலளித்துள்ள தயாநிதி அழகிரி, ‘சத்தியமா நான் இல்லை. எல்லோரையும் போல ‘மாநாடு’ திரைப்படம் நல்லபடியாக வெளியாக வேண்டும் என்று நான் விரும்பினேன். படம் நல்லபடியாக வெளியாகி வெற்றி பெற்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி’ என்று கூறியுள்ளார்.

எனவே ‘மாநாடு’ திரைப்படத்திற்கு கடைசி நேரத்தில் உதவி செய்தவர் தயாநிதி அழகிரி இல்லை என்பது இந்த டுவிட்டில் இருந்து தெரிய வருகிறது. அப்படி என்றால் ‘மாநாடு’ திரைப்படத்தின் ரிலீசுக்கு உண்மையில் உதவியது யார் யார் என்பது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஓப்பனாக கூறினால் மட்டுமே அனைவருக்கும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இப்ப சொல்லுங்க, நான் பண்ணினது தப்பா சார்? டுவிட்டரில் கேள்வி எழுப்பிய சிவகார்த்திகேயன்!

சிம்புவின் 'மாநாடு' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன் பதிவு செய்த டுவிட்டில், 'இப்ப சொல்லுங்க, நான் பண்ணினது தப்பா சார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

சூப்பர் ஹீரோ, புரியாத புதிர், ஆட்டோ மீட்டர்: போட்டியாளர்கள் குறித்து சஞ்சீவ் கணிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆகி உள்ள சஞ்சீவ் சக போட்டியாளர்கள் கணிப்பு குறித்து கூறும் காட்சிகள் இன்றைய அடுத்த புரோமோ வீடியோவில் உள்ளது.

விஜய் பிக்பாஸ் நிகழ்ச்சியை பாக்குறாரா? உள்ளே வந்த போட்டியாளரிடம் சிபி கேள்வி!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 53 நாட்களாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது தான் நிகழ்ச்சி மிகவும் சுவராசியமாக சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 

கொட்டும் லஞ்சப்பணம்… கழிவுநீர் குழாயில் கரன்சி நோட்டுகளை பதுக்கிய சம்பவம்!

கர்நாடக மாநிலத்தில் உயர் அதிகாரி ஒருவர் தான் வாங்கிய லஞ்சப்பணத்தை கழிவுநீர் குழாயில் பதுக்கி வைத்துள்ளார்.

திருமணம் பற்றி மனம்திறந்த இளம் நடிகை ரகுல் ப்ரீத் சிங்… வைரல் தகவல்!

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தியுடன் “தீரன் அதிகாரம் ஒன்று“ சூர்யாவுடன் என்.ஜி.கே போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்