close
Choose your channels

ஆமை புகுந்த வீடு! வைகோவை கலாய்க்கும் பிரபல தயாரிப்பாளர்

Tuesday, March 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளாகவே வைகோ உள்ள கூட்டணி வெற்றி பெறாது என்றே தமிழக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதுண்டு. அதிலும் குறிப்பாக கடந்த 2016ஆம் ஆண்டு வைகோ அமைத்த மக்கள் நலக்கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்து பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.

இந்த நிலையில் வைகோவின் மதிமுக, திமுக கூட்டணியில் இடம்பிடித்து ஒரு மக்களவை தொகுதியையும் ஒரு மாநிலங்களவை தொகுதியையும் பெற்றுள்ளது. 

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் மு.கருணாநிதியின் பேரனுமான தயாநிதி அழகிரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'ஒரு வீடு ஒரு அம்புக்குறி ஒரு ஆமை' படத்தை பதிவு செய்து 'ஆமை புகுந்த வீடு விளங்காது' என்பதை குறிக்கும் வகையில் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி தேர்தலுக்கு பின் வைகோ தனது கட்சியை திமுகவுடன் இணைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

தயாநிதி அழகிரியின் இந்த பதிவுக்கு வழக்கம்போல் நெட்டிசன்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos