மோடியுடன், முன்னாள் முதல்வரை இணைத்து பேசிய தயாநிதி...! தொடர்ந்து திமுக-விற்கு கெட்ட பெயர்..!

 

ஸ்டாலினை முதல்வராக்க விடாமல் தடுக்க, தயாநிதி மாறன் இப்படி செய்கிறார் என்ற செய்திகள் தற்போது வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம், கிணத்துக்கிடவு தொகுதியில் திமுக சார்பாக களமிறங்கும், பிரபாகரனுக்கு ஆதரவாக தயாநிதி அழகிரி அவர்கள், குறிச்சி பிரிவு இட்டேரி பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

இந்துக்களின் ஓட்டுக்களை பெற பாஜக தமிழகத்தில் வெறுப்பு அரசியல் செய்து வருகின்றது. முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் இடையே உள்ள ஒற்றுமையை பாஜக-வால் பிரிக்க இயலாது. ஒரு காலத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்த அதிமுக, தற்போது ஆட்சிக்கு வந்தால் இதை எதிர்ப்போம் என கூறுகின்றது. முதலில் நாடாளுமன்றத்தில் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கிறார்கள். இப்போது பொய் சொல்கிறார்கள். மத்திய அரசு ஏழை மக்களின் கனவை பறிக்கும் விதத்தில் நீட் தேர்வை கொண்டு வந்தது. இதனால் பறிபோனது 14 மாணவர்களின் உயிர் தான். இனி கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் நர்சிங்-ல் சேர்வதற்கு கூட தேர்வு உள்ளது என்கிறார்கள். இதனால் நம் மாநிலத்தின் உரிமையை காக்க மக்களாகிய நீங்கள் திமுக-விற்கே வாக்களிக்க வேண்டும். மேலும் பேசிய அவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மோடியை அப்பா என்றும், ஜெயலலிதாவை அம்மா என்றும் கூறுகிறார். இது எந்த விதமான உறவு. இதை நான் சொன்னால் என் மீது தவறு என்பார்கள் என்று பிரச்சாரத்தில் கூறினார்.

இந்நிலையில் தயாநிதி பேசியதற்கு மக்கள் மத்தியில் பெரும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

தயாநிதி மாறன் பீ.டீம் அதனால்தான் ஸ்டாலினை முதல்வராக்காமல் தடுக்க இப்படி செய்து கொண்டிருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர்.
 

More News

மார்க்கெட்டிங் தந்திரம்: கமல் கட்சி குறித்து கவுதமியின் விமர்சனம்!

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை கவுதமி, ராஜபாளையம் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

'கோப்ரா' பட நடிகருக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

நடுக்கடலில் யோகா? மெய்சிலிர்க்க வைக்கும் இளம் நடிகையின்  டிரெக்கிங் அனுபவம்!

தமிழ், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இளம் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங். இவர் தற்போது ஒரு சில இந்தி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

பிரதமர் மோடியின் ஆசிபெற்ற வேட்பாளர் நடிகை குஷ்பு… பிரச்சாரத்தில் தமிழக முதல்வர்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகம்- இந்தியில் தேர்தல் பிரச்சாரம் தேவையா? உண்மையை உடைக்கும் பரபரப்பு வீடியோ!

இந்தியாவில் மாநில மொழிகளுக்கான தனித்தன்மையைக் குறித்து  தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது.