'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம், ZEE5 ப்ரீமியருக்கு முன்னதாகவே, ரசிகர்களிடம் உற்சாக வரவேற்பைப் பெற்றுள்ளது !


Send us your feedback to audioarticles@vaarta.com


டிடி நெக்ஸ்ட் லெவல் படம், டிஜிட்டலில் வெளியாவதற்கு முன்னதாகவே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ZEE5 தளத்தில் அடுத்து வெளியாகவுள்ள ஹாரர்-காமெடி திரைப்படமான டெவில்ஸ் டபுள் : நெக்ஸ்ட் லெவல் படம், அதிகாரப்பூர்வ டிஜிட்டல் வெளியீட்டுக்கு முன்னதாகவே, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஜிட்டல் வெளியீடு குறித்தான டிரெய்லரும், புரமோ விடியோக்களும், சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. வித்தியாசமான களத்தில், ஹ்யூமர் மற்றும் அதிரடி சினிமா அனுபவத்தின் கலவையாக உருவாகியுள்ள இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சந்தானம், செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் கீதிகா திவாரி நடித்துள்ள இந்தப்படம், ஜூன் மாதத்தின் மிகவும் பேசப்படும் ஓடிடி ரிலீஸாக மாறியுள்ளது. படம் மீதான எதிர்பார்ப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்த டிஜிட்டல் வெளியீட்டில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம், ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை வழங்கும். ZEE5 தளத்தில் ஜூன் 13 முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் இப்படத்தை கண்டுகளிக்கலாம் !
இறந்துபோன திரைப்பட இயக்குநர் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) நடத்தும் ஒரு மர்மமான தனிப்பட்ட திரையிடலுக்கு, இளம் யூடுயூப் ரிவ்யூவர் கிஸ்ஸாவிற்கு அழைப்பு வருகிறது. அவனுக்குத் தெரியாமல் அவன் குடும்பம் அந்த திரையிடலுக்குச் சென்ற நிலையில், அவர்கள் படத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த படத்திற்குள் செல்லும் கிஸ்ஸா, தன் குடும்பத்தை, தன் காதலியைக் காப்பாற்ற என்ன செய்கிறான், அதிலிருந்து எப்படி தப்பி வெளியில் வருகிறான்? என்பது தான் இப்படத்தின் கதை. வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் அதிரடி பயணத்திற்கு தயாராகுங்கள்.
ZEE5-தளத்தில் ஜூன் 13 முதல் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ பார்த்து ரசியுங்கள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Ishaan Murali
Contact at support@indiaglitz.com
Comments