ஒரே புகைப்படத்தில் கமல், ஷாருக்கான், விஜய், சூர்யா... இது AI அல்ல.. டிடியின் பதிவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் டிவி பிரபலம் 'டிடி' என்ற திவ்யதர்ஷினி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில், கமல்ஹாசன், ஷாருக்கான், விஜய், சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் இருப்பதை எடுத்துக் கொண்டு, அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பதிவில், "ஏஐ டெக்னாலஜி எல்லாம் வருவதற்கு முன்பாகவே இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் இப்போது எனது நினைவுக்கு வருகிறது," என்று கூறி, டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
விஜய் டிவியில் நடந்த நிகழ்ச்சியின் போது, பல திரை உலக பிரபலங்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவ்வாறு கலந்து கொண்ட போது தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.
கமல்ஹாசன், ஷாருக்கான், ஷங்கர், பிரபு, ஏ.ஆர். ரஹ்மான், விஜய், சூர்யா, விக்ரம், பிரபு உள்ளிட்டவர்களுடன், டிடி செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே புகைப்படத்தில் பல லெஜெண்ட்கள் இருப்பதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது என, இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com