விவாகரத்தான நடிகரை திருமணம் செய்ய ஆசைப்படும் டிடி.. இது அந்த நடிகருக்கு தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,May 13 2024]

விவாகரத்தான பிரபல நடிகரை திருமணம் செய்ய ஆசை என விஜய் டிவி பிரபலம் டிடி என்ற திவ்யதர்ஷினி கூறியுள்ள நிலையில் இது அந்த நடிகருக்கு தெரியுமா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவி பிரபலமான டிடி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார் என்பதும் குறிப்பாக ’காப்பி வித் டிடி’ என்ற நிகழ்ச்சியில் அவர் நயன்தாரா உள்பட பல பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ள டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நெருங்கிய நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் 3 ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்த டிடி இன்னும் மறுமணம் செய்யாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிய டிடி, ‘தனக்கு பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது கிரஷ் என்றும் அவரை திருமணம் செய்து கொள்ளவும் தயார் என்றும் ஆனால் அவர் சம்மதிப்பாரா என்று தெரியவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த கேள்விக்கு பலர் ’நீங்கள் ஹிருத்திக் ரோஷன் திருமணம் செய்ய ஆசைப்படுவது அவருக்கு தெரியுமா? என்று கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

More News

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியாளர் கைது.. என்ன காரணம்?

பிரபல பாடகரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான வேல்முருகன் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

த்ரிஷாவின் அடுத்த பட படப்பிடிப்பு நிறைவு.. ரிலீஸ் எப்போது?

நடிகை த்ரிஷா தற்போது அஜித் உடன் 'விடாமுயற்சி' மோகன்லாலுடன் 'ராம்' கமல்ஹாசன் உடன் 'தக்லைஃப்' சிரஞ்சீவி உடன் 'விஸ்வாம்பரா' மற்றும் டொவினோ தாமஸ் உடன் 'ஐடெண்டிட்டி'

எதிர்பாராமல் நடந்த கார் விபத்து.. சம்பவ இடத்திலேயே பிரபல சீரியல் நடிகை பலி..!

எதிர்பாராமல் நடந்த கார் விபத்தில் பிரபல சீரியல் நடிகை சம்பவ இடத்திலேயே பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் கொடுத்த பெரிய ஆஃபர்.. ஆனாலும் 'பிரேமலு' இயக்குனரின் அதிரடி முடிவு..!

உலக நாயகன் கமல்ஹாசன் தனது நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை 'பிரேமலு' இயக்குனருக்கு கொடுத்த நிலையில் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவர் எடுத்த அதிரடி முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மிக வேகமாக பரவும் ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வதந்தி.. அமைதி காக்கும் தம்பதிகள்..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்யப் போவதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வதந்தி பரவிக் கொண்டிருக்கும்