பாதிப்பு குறைவு....! ஆனால் உயிரிழப்பு அதிகம்...பதறும் கொங்கு மண்டலம்......!

  • IndiaGlitz, [Friday,June 04 2021]

கோவையில் கொரோனா அதிகரித்து வந்த நிலையில், தற்போது பாதிப்பு சற்றே குறைந்துள்ளது.

கொங்கு மண்டலமான கோவையில், கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில், உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது, இதனால் பெரும்பாலான மக்கள் பயத்தில் உள்ளனர். இன்று மட்டும் சுமார் 2890 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,79,898 -ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 4,546 பேர், தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,40,999 பேர் ஆகும்.

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவிற்கு பாதிப்படைந்து, 48 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,394-ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் கொரோனா பாதிக்கப்பட்டு, அனுமதிக்கப்படும் நோயாளிகள் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தால், அவர்களின் இறப்பிற்கும் வேறு பிற காரணங்களை மருத்துவர்கள் குறிப்பிடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

 

More News

கொரோனா தடுப்பு பணிக்காக சீமான் ரூ.5 லட்சம் நிதியுதவி!

கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் ரூ.5 லட்சம் நிதியை நன்கொடையாக வழங்கி உள்ளார்.

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு: எஸ்பிபிக்காக கமல் பதிவு செய்த டுவிட்!

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனும் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது திரையுலகைச் சார்ந்த அனைவருக்கும் தெரிந்ததே.

தடுப்பூசி ஒரு ஹெல்மெட் மாதிரி: டபுள் ஆக்சனில் கலக்கும் வரலட்சுமியின் வீடியோ!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சமூக கருத்துக்களை பகிர்ந்து வருவார் என்பதும் தெரிந்ததே

வாய்ப்புகளை மறுத்த நடிகை....! சரியாக பயன்படுத்திய நயன்... அதுவும் சூப்பர் ஹிட் படங்களில்...!

நயன்தாரா நடித்து ஹிட் அடித்த இரு படங்களின் வாய்ப்பு, முதலில் தனக்கு வந்ததாக நடிகை ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

கர்ப்பமான மனைவி வயிற்றில் முத்தமிடும் இந்த நடிகர் யார் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் தனது கர்ப்பமான மனைவியின் வயிற்றில் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது