அனிதா குடும்பத்திற்கு ஆறுதல் கூறுகிறார் தீபா

  • IndiaGlitz, [Tuesday,September 19 2017]

நீட் தேர்வு காரணமாக 1176 மதிப்பெண்கள் எடுத்தும் மெடிக்கல் சீட் கிடைக்காத மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மறைவு தமிழத்தையே அதிர்ச்சி அடைய செய்தது. அவருடைய குடும்பத்தினர்களுக்கு அரசியல் தலைவர்களும், விஜய் உள்பட பல திரையுலக பிரமுகர்களும் ஆறுதல் கூறியதோடு நிதியுதவியும் அளித்தனர்.

இந்த நிலையில் நாளை அனிதாவின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூற ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரியலூர் செல்லவுள்ளதாகவும், அதற்கான  ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இதுகுறித்து தீபா அணியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், அனிதா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல தீபா நாளை அரியலூர் வருகிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீபா, அவர் கணவர் மாதவன் இருவரும் சேர்ந்து, அனிதா வீட்டுக்குச் செல்கின்றனர். நிதியுதவியும் அளிக்கப்படவுள்ளது என்றனர்.

More News

மூன்று வருடங்களுக்கு மீண்டும் மோதும் விஜய்-விஷால் படங்கள்

கடந்த 2014ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் விஜய் நடித்த 'கத்தி' மற்றும் விஷால் நடித்த 'பூஜை' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது.

தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி: மூத்த பாஜக தலைவர் கருத்து

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அரசியல் நிலையற்ற தன்மை இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்னும் 2 வாரத்தில் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி வர வாய்ப்பு இருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்

மகேஷ்பாபுவுடன் விஜய், விஜய்யுடன் விக்ரம்: புதுமையான கூட்டணி

இன்றைய கோலிவுட் திரையுலகினர் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்பது பல நிகழ்ச்சியில் இருந்து தெரியவந்துள்ளது.

பெண் எம்.எல்.ஏவிடம் பாராட்டு பெற்ற 'மகளிர் மட்டும்'

கடந்த வாரம் வெளிவந்த ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பாராட்டை பெற்றது மட்டுமின்றி பல விஐபிக்கள் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்

கார்த்தியின் 'தீரன் அத்தியாயம் ஒன்று' ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல நடிகர் கார்த்தி நடித்து வரும் 'தீரன் அத்தியாயம் ஒன்று' திரைப்படம் தளபதி விஜய்யின் 'மெர்சல்' வெளியாகும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று பரவலாக செய்திகள் கடந்த சில நாட்களாக பரவியது