ஜெயலலிதாவின் நிஜப்பெயர் கோமளவல்லியா? தீபா விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,November 10 2018]

விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் வரலட்சுமியின் கேரக்டரான கோமளவல்லி என்ற கேரக்டர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறி அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த பெயர் படத்தில் மியூட் செய்யப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், அரசியல் அமைப்பு ஒன்றின் தலைவியுமான ஜெ.தீபா விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தீபா கூறியதாவது: ஜெயலலிதா பற்றி எனது தந்தைக்கு தான் நன்றாக தெரியும். அவர் அம்மு என்று செல்லப்பெயரில் தான் ஜெயலலிதாவை அழைப்பார். மைசூரில் பிறந்த அவருக்கு ஜெயா என்றுதான் பெயர் சூட்டினார்கள்' என்று கூறினார்.

ஏற்கனவே ஜெயலலிதாவின் உண்மையான பெயர் கோமளவல்லி இல்லை என்றும், அவர் நடிகையாக இருந்தபோது கோமளவல்லி என்ற கேரக்டரில் கூட நடிக்கவில்லை என்றும் டிடிவி தினகரன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஓடும் பேருந்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்த கள்ளக்காதல் ஜோடி

துாத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் என்ற பகுதியை சேர்ந்த நயினார் - இலக்கியா தம்பதிக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர்களது திருமண வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருந்தபோது

'96' பட நிறுவனத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் '96'. இந்த படத்தின் ரிலீசின்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்

இணையத்தில் '2.0': தமிழ் ராக்கர்ஸ் விளக்கம்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தை வெளியான அன்று மாலையே டிஜிட்டல் பிரிண்டை வெளியிடுவோம் என்று அறிவித்து அதன்படியே படத்தை வெளியிட்டு சவாலை நிறைவேற்றியது

ஒருவிரல் புரட்சி: நிஜத்தில் நடக்கும் நீக்கப்பட்ட காட்சிகள்

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

வரலட்சுமியின் புதிய கேரக்டர் குறித்த அறிவிப்பு

நடிகை வரலட்சுமி சமீபத்தில் வெளிவந்த 'சண்டக்கோழி 2' மற்றும் 'சர்கார்' ஆகிய இரண்டு படங்களிலும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் பாராட்டுதல்களை பெற்று வருகிறார்.