close
Choose your channels

இயக்குனர் கவுதம்மேனனுக்கு ஜெயலலிதா அண்ணன் மகன் எச்சரிக்கை

Thursday, September 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்குனர் விஜய் ‘தலைவி’ என்ற பெயரில் இயக்கி வரும் நிலையில், இயக்குனர் கவுதம்மேனன், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘குவீன்’ என்ற பெயரில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்த வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வெப் சீரீஸ்க்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, ‘ஜெயலலிதா குறித்து ‘தலைவி’ என்ற படத்தை இயக்கப்போவதாக இயக்குநர் விஜய் எங்களிடம் ஏற்கனவே முன் அனுமதி பெற்றிருந்தார். கெளதம் மேனன் இயக்கும் ‘க்வீன்’ என்ற வெப் சீரிஸ் யாரை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்று தீபக் கூறியுள்ளார்.

மேலும் எங்கள் குடும்பத்தின் அனுமதியின்றி ஜெயலலிதா குறித்து படமோ, வெப் சீரிஸோ எடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தீபக் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து ‘குவீன்’ வெப் சீரிஸ் திட்டமிட்டபடி வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.