சிம்புவுக்கு ஜோடியாகிறாரா தீபிகா படுகோன்? இன்னொரு ஹீரோயின் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,January 24 2024]

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் தீபிகா படுகோன் என்றும் கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ’சிம்பு 48’. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அன்றைய தினமே இந்த படத்தின் நாயகிகள் அறிவிப்பும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஹீரோ வில்லன் என இரண்டு வேடங்களில் சிம்பு நடிக்க இருக்கும் நிலையில் அவருக்கு இரண்டு நடிகைகள் ஜோடியாக நடிக்க உள்ளனர். அவர்களின் ஒருவர் தீபிகா படுகோன் என்று கூறப்படுகிறது. இன்னொருவர் தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் என்றும் கூறப்படுகிறது. அனேகமாக வில்லன் சிம்புவுக்கு தீபிகா படுகோன், ஹீரோ சிம்புவுக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட்டில் ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் தீபிகா படுகோன், சிம்புக்கு ஜோடியாக நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ரஜினிகாந்த் நடித்த ’கோச்சடையான்’ என்ற ஒரே தமிழ் படத்தில் மட்டுமே தீபிகா படுகோன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

5வது மாதத்தில் வளைகாப்பு.. கணவருடன் ஜாலியாக ஆட்டம் போட்ட சீரியல் நடிகையின் வீடியோ..!

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களை நடித்து வரும் நடிகை ஒருவர் தற்போது ஐந்து மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் வளைகாப்பு தினத்தில்   கணவருடன் கைகோர்த்து ஜாலியாக

விஜய்சேதுபதி பட இயக்குனரின் அடுத்த படத்தில் 2 ஹீரோக்கள்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

விஜய்சேதுபதி பட இயக்குனரின் அடுத்த திரைப்படம் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படத்தின் முக்கிய அறிவிப்பு.. ரசிகர்கள் உற்சாகம்..!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தக்லைஃப்' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில்

ஒரே நாளில் இரண்டு விழா  கொண்டாடிய இனியா.. என்னென்ன சேஷங்கள்?

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இனியா. கதையோடு ஒன்றி கதாபாத்திரமாக மாறி அசத்தலான நடிப்பாற்றல்

டீன் ஏஜில் காலடி எடுத்து வைத்த ரம்பா மகள்.. தமிழ் சினிமாவுக்கு ஹீரோயின் ரெடியா?

நடிகை ரம்பாவின் மகள் சமீபத்தில் டீன் ஏஜில் காலடி எடுத்து வைத்த நிலையில் அவரது குடும்பத்தில் நிகழ்ந்த பூஜை ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.