விசாரணையின்போது கதறியழுதாரா தீபிகா படுகோன்? பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Sunday,September 27 2020]

போதைப்பொருள் விவகாரம் இந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது தெரிந்ததே. பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி, கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, ஆகியோர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பிரபல பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன், சாரா அலிகான், சாரதா கபூர், மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர்கள் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளனர்

இதில் விசாரணையின்போது தீபிகா படுகோன் மூன்று முறை அழுததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் குறித்த வாட்ஸ் அப் குழு ஒன்றுக்கு தீபிகா படுகோன் அட்மினாக இருந்ததாக வெளியான தகவலை அடுத்தே அவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்ததாகவும் அவரிடம் 6 மணி நேரம் நடந்த விசாரணையின்போது மூன்று முறை அவர் இடையிடையே அழுததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இதனை அடுத்து தீபிகாவிடம் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று அனுப்பி வைத்துள்ளனர் மேலும் தீபிகா படுகொன் உள்பட நான்கு நடிகைகளின் செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து தடயவியல் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

எஸ்பிபி இறந்தவுடன் மருத்துவமனையில் நடந்தது என்ன? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்பிபி சரண்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களின் மறைவு ஒட்டுமொத்த திரை உலகையே உலுக்கி உள்ள நிலையில் ஒரு சிலர் எஸ்பிபி குறித்த வதந்தியை பரப்பி வருவது குறித்து எஸ்பிபி சரண்

வாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளரின் குடும்பத்தையே கத்தியால் குத்திய நபர்: சென்னையில் பரபரப்பு

சென்னையில் வீட்டு வாடகை கேட்ட வீட்டின் உரிமையாளர் உள்பட அவரது குடும்பத்தினரை வாடகைக்கு இருந்த ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

நீயா நானா? என போட்டி போடுவோம்: எஸ்பிபி குறித்து எஸ்.ஜானகி

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சமீபத்தில் மரணமடைந்த நிலையில் அவரது நினைவலைகள் குறித்து பல பிரமுகர்கள் தங்களது சமூக வலைதளங்கள்

இதைப்பற்றி யாராவது விவாதம் செய்தார்களா? சின்மயி ஆவேசம்

போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல நடிகைகள் சிக்கியது குறித்தும், அதில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டு இருப்பது குறித்தும், இன்னும் சில நடிகைகளிடம் விசாரணை செய்து கொண்டிருப்பது குறித்தும்

இப்ப சந்தோஷம் தானா? எஸ்பிபியின் கேள்வியை கேட்டு ஆச்சரியமடைந்தேன்: ஹாரீஸ் ஜெயராஜ்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபியின் மறைவு திரையுலகினர்களை உலுக்கியுள்ள நிலையில் அவருடன் பழகிய நினைவலைகளை அவ்வப்போது திரையுலக நட்சத்திரங்கள் பகிர்ந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்