சர்ச்சைக்குரிய ட்வீட் பதிவு செய்தவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த பிரபல நடிகை..!

  • IndiaGlitz, [Sunday,April 23 2023]

பிரபல நடிகை ஒருவர் தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் ட்விட் செய்தவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஊர்வசி ரெளட்டாலா. இவர் தமிழில் லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் வெளியான சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ள இவர் தற்போது ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகி வரும் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஊர்வசி ரெளட்டாலா இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 65 மில்லியன் ஃபாலோயர்கள் பாலோ செய்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் சமூக வலைதள பிரபலம் ஒருவர் ஊர்வசி ரெளட்டாலா குறித்து சர்ச்சைக்குரிய டிவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ’ஏஜென்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்த போது ஊர்வசியை ஹீரோ அகில் அகினேனி என்பவர் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள ஊர்வசி, ‘உங்களது பொய்யான ட்விட் குறித்து எனது வழக்கறிஞர் குழுவால் அவதூறு வழக்கு தொடர நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, உங்கள் தகவல் உண்மையானது அல்ல. நீங்கள் ஒரு முதிர்ச்சி அடையாத நபர், உங்களால் எனது குடும்பத்திற்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

முன்னாள் முதலமைச்சரின் நூற்றாண்டு விழா.. ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என அறிவிப்பு..!

ஆந்திர மாநிலம் முன்னாள் முதலமைச்சர் என்டிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'மார்க் ஆண்டனி' படத்தில் இணைந்த 'குக் வித் கோமாளி' பிரபலம்..! விஷால் அறிவிப்பு..!

விஷால், எஸ்ஜே சூர்யா உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மார்க் ஆண்டனி' என்பதும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக

துபாயில் ரொமான்ஸ் மூடில் ஆர்யா-சாயிஷா.. செம்ம புகைப்படம் வைரல்..!

நடிகை சாயிஷா தனது கணவர் ஆர்யாவுடன் துபாயில் ரொமான்ஸ் மூடில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.

'ஜெயம்', 'அந்நியன்' சதாவா இவர்? லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

'ஜெயம்' திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'அந்நியன்' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை சதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்யும் அழகை வச்சகண் வாங்காமல் பார்த்து ரசிக்கும் நடிகை: வைரல் வீடியோ..!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது படத்திற்கு கம்போஸ் செய்யும் பாடலை வச்ச கண் வாங்காமல் பார்த்து ரசிக்கும் பிரபல நடிகையின் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.