இந்த வாரம் ஓடிடியில் எத்தனை தமிழ் படங்கள்? முழு விவரங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,May 18 2023]

ஒவ்வொரு வாரமும் தமிழ் உட்பட பல மொழிகளில் உள்ள திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்ற விவரத்தை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.

விமல், பாண்டியராஜன் நடித்த ‘தெய்வ மச்சான்’ என்ற திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் இந்த படம் இந்த வாரம் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

’மாடர்ன் லவ் சென்னை’ என்ற ஆந்தாலஜி வெப் தொடர் அமேசான் ப்ரைமில் ஒளிபரப்பாகிறது. இதில் பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், தியாகராஜன் குமாரராஜா, ராஜூ முருகன், உள்ளிட்ட 7 பேர்களின் குறும்படங்கள் உள்ளன.

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த ‘சென்டிமீட்டர் என்ற படம் டெண்ட்கொட்டா ஓடிடியில் வெளியாகிறது.

மேலும் ஆரவ், வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ என்ற திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மேலும் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ‘பூக்காலம்’ என்ற மலையாள திரைப்படம் வெளியாக உள்ளது. நெட்பிளிக்ஸில் ’விரூபாக்சா’ என்ற தெலுங்கு திரைப்படம், ‘கதை’ என்ற இந்தி திரைப்படம், ’அயல்வாஷி’ என்ற மலையாள திரைப்படம் வெளியாக உள்ளது.

மேலும் சோனிலைவ் ஓடிடியில் ’Kadina Kadoramee Andakadaham’ என்ற மலையாள திரைப்படம் ’மிஸ்ஸிங்’ மற்றும் ’தி சன்’ ஆகிய ஆங்கில படங்கள் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

More News

5 நிமிடம் செல்போன் இல்லாமல் இருக்க முடியுமா? இந்தியர்களைப் பாதிக்கும் நோமோஃபோபியா!

சமீபத்தில் செல்போன் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் இந்தியாவிலுள்ள ஸ்மார்ட்போன் பயனாளர்கள் பலரும் நோமோஃபோபியா எனும் புதுவகை பயத்தை அனுபவித்து வருவதாக

81 வயதில் பிகினி போஸ்… உலக அளவில் திரும்பி பார்க்க வைத்த மாடல் அழகி!

வயதிற்கும் அழகுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 81 வயதில் நீச்சல் உடை அணிந்து பலரையும் அசர வைத்திருக்கிறார் பிரபல தொழிலதிபரும் மாடலுமான மார்த்தா ஸ்ட்வர்ட்

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த உலகக்கோப்பையை வென்ற கிரிக்கெட் வீரர்.. வைரல் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களான வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சந்தித்தனர் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில்

கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் தேதியில் மாற்றமா? மாணவர்கள் குஷி..!

தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி வீட்டில் விருந்து சாப்பிட்ட 80s நடிகைகள்.. வீடியோ வைரல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி வீட்டில் 80s நடிகைகள் மூன்று பேர் விருந்து சாப்பிட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.