close
Choose your channels

மீண்டும் டெல்லியில் ஆட்சியை அமைக்க உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்

Tuesday, February 11, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டெல்லி சட்ட மன்றத் தேர்தல் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும் 2,700 வாக்கு மையங்கள் அமைக்கப் பட்டு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் கடந்த 2015 ஐ விட குறைவான வாக்குகளே பதிவாகி இருந்தன என்பதும் குறிப்பிடத் தக்கது. 54% என்பது மந்தமான வாக்கு விகிதம் என்று தேர்தல் ஆணையமும் கருத்துத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத் தக்கது.

டெல்லி சட்ட மன்றத்தில் மொத்தம் 70 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ், பா.ஜ.க., ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்ப்பார்க்கப் பட்டது. டெல்லி சட்ட மன்றத்தின் காலம் வரும் 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போது தேர்தல் நடத்தப் பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதால் ஆட்சியை கலைத்து உத்திரவிட்டு இருக்கிறார் அதன் துணை நிலை ஆளுநரான அனில் பைஜால்.

டெல்லியில், அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் ஆம் ஆத்மி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் 24 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தேர்தல் முடிவுகள் முழுதாக அறிவிக்கப் படும் முன்னரே ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் கொண்டாட்டத்தில் மூழ்கியது. பா.ஜ.க. 3 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. 5 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பல இடங்களில் பா.ஜ.க வும் ஆம் ஆத்மி கட்சியும் கடும் போட்டியைச் சந்தித்தன என்பதும் குறிப்பிடத் தக்கது. பா.ஜ.க. பல இடங்களில் ஆம் ஆத்மி க்கு நெருக்கடியை கொடுத்த போதிலும் பெரும்பான்மையான இடங்களை பிடிக்க முடியவில்லை. பா.ஜ.க. கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் எதிரொலியாக இதை எடுத்துக் கொள்ள முடியுமா என்ற ரீதியில் தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன. டெல்லியில் முஸ்தாபாத், மத்தியா மஹால், சீலாம்பூர் போன்ற பல பகுதிகளில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. இதில் பெரும்பான்மையான இடங்களில் ஆம் ஆத்மி வெற்றிப் பெற்றுள்ளது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.

டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றிக்கு பிரசாத் கிஷோரின் –ஐ பேக் நிறுவனம், ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து பணி ஆற்றியது. “இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாத்த டெல்லி மக்களுக்கு நன்றி” என்று பிரசாத் கிஷோர் கூறி இருக்கிறார். ஆம் ஆத்மியின் வெற்றிக்கு இவரின் அரசியல் வியூகங்களும் முக்கிய காரணம் என்று பல்வேறு தரப்பினர் கருத்துக் கூறி வருகின்றனர். தற்போது தமிழகத்தில் ஐபேக் நிறுவனம் திமுகவுடன் கைகோர்த்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

பாஜக வின் வாக்கு வங்கி சென்ற தேர்தலை விட 7% அதிகரித்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப் பட்ட பிறகு பா.ஜ.க. சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலைப் பிடித்திருந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியிடம் தோற்றது. இந்த முறை வெற்றிப் பெற வேண்டும் என்ற முனைப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா போன்றோர் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தற்போது ஒரு இடங்களை கூட பிடிக்க வில்லை கட்சி வட்டாரத்தில் மிகுந்த வருத்தத்தை வரவழைத்து இருக்கிறது.

பா.ஜ.க. வின் தோல்வியை ஒப்புக் கொள்வதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும் எம்பியுமான கௌதம் கம்பீர் தெரிவித்து இருக்கிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தான பானர்ஜி, CAA திட்டம் தான் பாஜக வின் இத்தகைய நிலைமைக்கு காரணம் என விமர்ச்சித்து உள்ளார் மக்கள் வகுப்பு வாத அரசியலை விரும்ப வில்லை என்ற ரீதியில் விமர்சித்து எம்பி கனிமொழி மற்றும் திமுக கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

2015 இல் நடைபெற்ற டெல்லி சட்டப் மன்றத் தேர்தலில் மொத்த முள்ள தொகுதிகளில் 67 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி வென்றது குறிப்பிடத் தக்கது. டெல்லி சட்ட மன்றத் தேர்தலில் இதுவரை கட்சி தலைவர்கள் தான் முதலமைச்சர்களாகவும் பொறுப்பு ஏற்றுள்ளனர். முன்னர் ஷீலா தீட்சித், அரவிந்த் கெஜ்ரிவால் இருவரும் முதலமைச்சராக பொறுப்பு வகித்தனர். தற்போதும் அரவிந்த் கெஜ்ரிவாலே முதல்வர் பதவியை ஏற்பார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.